‘‘ஒட்டுவேலை’’- லோகோவை மாற்றிய கூகுள் குரோம்: நெட்டிசன்கள் விமர்சனம்

By செய்திப்பிரிவு

கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ள நிலையில் பழைய மற்றும் புதிய லோகோவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, கூகுள் குரோம் தனது லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும் மாற்றப்படவில்லை. இதில் உள்ள சிகப்பு, நீலம், பச்சை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களின் சேர்க்கை சற்று அதிகப்படுத்தப்பட்டு நிழல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக லோகோ அதிக மாற்றங்கள் இன்றி அதேசமயம் நேரலை போன்ற அனுபவத்தை கொடுக்கிறது.

புதிய மாற்றங்களின் படி விண்டோஸ், மேக் ஓஎஸ் என ஒவ்வொரு தளங்களிலும் குரோம் ஓஎஸ் வித்தியாசமாக காட்சியளிக்கும். மேக் ஓஎஸ் சாதனங்களில் லோகோ 3டி தோற்றம் பெற்று இருக்கிறது. மேக் ஓஎஸ் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கூகுள் குரோம் பிரவுசரில் பீட்டா ஐகான் காட்சியளிக்கிறது.

இதுதொடர்பாக கூகுள் குரோம் வடிவமைப்பாளரான எல்வின் ஹு, தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவை வெளியிட்டு லோகோவின் மறுவடிவமைப்பு காட்சியையும் வழங்கியுள்ளது.

அதில் ‘‘பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் சில நிழல்கள் அடுத்ததாக வைப்பது விரும்பத்தகாத வண்ண அதிர்வுகளை உருவாக்கியது. எனவே, ஐகானுக்கு மிகவும் நுட்பமான மாற்றத்தை அறிமுகப்படுத்துகிறோம்.

8 ஆண்டுகளில் முதல் முறையாக குரோமின் பிராண்ட் ஐகான்களைப் புதுப்பிக்கிறோம். புதிய ஐகான்கள் விரைவில் உங்கள் சாதனங்களில் தோன்றத் தொடங்கும். குரோம் தோற்றம் வெவ்வேறு இயக்க முறைமைகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

குரோமில் மீதமுள்ள சிஸ்டம் ஐகான்களின் தோற்றத்துடன் பொருந்த, சாய்வுகள் இல்லாமல் பிரகாசமான வண்ணங்களைப் பயன்படுத்தியுள்ளன. மேக்ஒஎஸ்சில் அவை 3டி ஆக இருக்கும். பீட்டாவுக்கு வண்ணமயமாக உருவாக்கியுள்ளோம்’’ எனத் தெரிவித்துள்ளது.

புதிய லோகோ பிப்ரவரி 4 முதல் வெளிவரத் தொடங்கியுள்ளது. இதனை தற்போது குரோம் கேனரியில் காண கிடைக்கிறது. அடுத்த சில மாதங்களில் மற்ற அனைவருக்கும் இது படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 மற்றும் 11 பதிப்புகள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன.

பழைய மற்றும் புதிய லோகோவிற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். லோகோவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றம் சமூக ஊடகங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.

பெரிய மாற்றம் ஏதும் செய்யவில்லை என்றும், ஒட்டுவேலை என்றும் சிலர் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது என்ன பெரிய மாற்றமா? என வேறு சிலர் கருத்து தெரிவத்துள்ளனர்.

இதையடுத்து மாற்றத்திற்குப் பின் உள்ள காரணத்தை விளக்கிய எல்வின் ‘‘ஏன் அமைப்பு பற்றி கவலைப்படுகிறீர்கள். மிகவும் நுட்பமானதா? என்று நீங்கள் கேட்கலாம். வெவ்வேறு தளங்களிலும் எங்கள் குரோம் லோகா ஈர்ப்புடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்ப அனுபவத்தை நாங்கள் வடிவமைக்கிறோம். எங்கள் பிராண்ட் அதே அளவிலான கவனிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

மேலும்