புதிதாக ஒரு மெசேஜிங் செயலி அறிமுகமாகி இருக்கிறது. ‘டிரைப்.பிஎம்' எனும் அந்த செயலியை, இன்னொரு மெசேஜிங் செயலி என அலட்சியம் செய்து ஒதுக்கிவிட முடியாமல் புதுமையான அம்சங்களுடன் வந்திருப்பதுதான் கவனத்தை ஈர்க்கிறது.
வாக்கி-டாக்கியின் மறு வடிவம் என்று செல்லப்படும் செய்யப்படும் இந்தச் செயலியை மிக எளிதாக, ஒற்றை விரலில் இயக்கலாமாம். இதில் மெசேஜ் அனுப்ப கீபோர்டில் கை வைக்கும் தேவையும் கிடையாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்படி என்றால், செயலி மூலம் தொடர்புகொள்ள வேண்டியவரின் புகைப்படப் பகுதியை கிளிக் செய்து அப்படியே அழுத்திக்கொண்டிருந்தால் போதும், நாம் சொல்ல வேண்டிய செய்தியைப் பதிவு செய்து விடலாம். அதன் பிறகு ‘அனுப்பு' பட்டனை அழுத்தினால் போதும் அந்தச் செய்தி வீடியோ வடிவில் சென்றடையும்.
செய்தியை; அனுப்பும் முன் நம்முடைய தோற்றம் எப்படி இருக்கிறது என முன்னோட்டம் பார்ப்பதற்கான கண்ணாடி வசதியும் செயலியில் இருக்கிறது. வீடியோ செய்தியைப் பெறுபவர் அதிலேயே கிளிக் செய்து பதில் செய்தியையும் அனுப்பலாம்.
தொடர்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் குழுவில் உள்ள அனைவருக்கும் செய்தி அனுப்ப முடியும் என்பதால் இந்த மெசேஜிங் செயலியைப் பல விதங்களில் பயன்படுத்தலாம்.
அனுப்பும் செய்திகளைச் சேமித்து வைக்கும் வசதியும் இருக்கிறது. உலகின் எந்தப் பகுதியிலும் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் அறிமுகமாகி இருக்கிறது.
தரவிறக்கம் செய்ய: >http://tribe.pm/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
17 hours ago
தொழில்நுட்பம்
17 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
27 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago