ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் மைக்குடன் கூடிய புதிய உயர்ரக ஹெட்போஃனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது USB மற்றும் 3.5mm ஸ்டீரியோ இன்புட்டுடன் கூடிய ஏலெக்ட்ரோ ஹெட் ஆகும். மேலும் டியூவல் இன்புட் தேர்வும் இதில் உள்ளது.
இதிலுள்ள மற்ற அம்சங்கள்
• டீப் பாஸ்
• USB அல்லது 3.5mm இன்புட்
• 50mm டிரைவர்
• இன் பில்ட் மைக்
• வசதியான மற்றும் மென்மையான பெரிய இயர் பேடுகள்
• வலிமையான ஸ்லீவுடன் கூடிய கேபிள்
• ஒலி அளவு கட்டுப்பாட்டுக் கருவி
• நிறம் மாறும் LED லைட்டுகள்
இந்த எலெக்ட்ரோ ஹெட், இசை, சினிமா மற்றும் விளையாட்டிற்கு ஏற்ற உயர்ரக ஹெட்போன் ஆகும். இது டியூவல் இன்புட் ஆப்ஷன்களுடன் வருகிறது. இன்புட்டிற்காக USB அல்லது 3.5mm ஸ்டீரியோ கனெக்டரைப் பயன்படுத்தலாம். மேலும் இது பெரிய 50mm டிரைவர்களுடன் வருவரதால் அலைவரிசை செயல்பாடு சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஹெட்போன் தாழ்வான ஒலியிலும் உயர்ந்த ஒலியிலும் சிறப்பாக வேலை செய்யும் என ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் எல்லா திசைகளிலும் இயங்கும் இன் பில்ட் மைக் உள்ளது. இதன் இம்பிடன்ஸ் (மின் தடை) 32 ஓம்கள் ஆகும். இதை கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டிகளுடன் பயன்படுத்தலாம்.
காதுகளை முழுமையாக மூடிக்கொள்ளும் பெரிய இயர் பேடுகளுடன் வரும் இந்த ஹெட் போன் ஒலி இரைச்சல் தடுப்பை அளிக்கும். இயர் பேடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எலெக்ட்ரோ ஹெட் 2.2 மீட்டர் நீள கேபிளுடன் கறுப்பு மற்றும் சாம்பல் நிற வண்ணங்களில் கிடைக்கும். சில்லறை விற்பனை கடைகளிலும் மற்றும் ஆன்-லைனிலும் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸின் ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது. இதன் விலை ரூபாய் 1990/- ஆகும்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago