செயலி புதிது: காமிக்ஸ் பச்சோந்தி

By சைபர் சிம்மன்

‘காமிக்கெமிலியன்' காமிக் பிரியர்களுக்கான செயலி. இதில் அபிமான காமிக் கதைகளை எளிதாகப் படிக்கலாம். காமிக் செயலிகள் நிறைய இருந்தாலும் இந்த செயலியில் காமிக்ஸ் பக்கங்கள் தோன்றும் விதம் விஷேசமானது.

பெரும்பாலான காமிக்ஸ் செயலிகளில் கதைப் பக்கங்கள் இமேஜாகத் தோன்றும். அதை எப்படிப் படிப்பது என்பது உங்கள் பொறுப்பு. ஆனால் இந்தச் செயலி காமிக்ஸ் பக்கத்தை ஒவ்வொரு பேனலாக வாசிக்க வழி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

விரலால் தட்டினால் போதும் அடுத்த பேனலுக்குச் செல்லலாம் என்பதோடு ஒவ்வொரு பேனலும் வாசிப்புக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது.

காமிக்ஸ் பிரியர்கள் நிச்சயம் இதை ரசிப்பார்கள்.

இதில் வாசிக்கக் கூடிய காமிக்ஸ்களுக்கு என்று பெரிய பட்டியல் இருப்பதோடு ஒவ்வொரு காமிக்ஸ் புத்தகமாக தனித்தனியே வாங்கும் தேவையில்லாமல் பழைய புத்தகங்களை எல்லாம் எளிதாக அணுக முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணைய செயலியாக அறிமுகமாகி, ஐபோன் மற்றும் ஐபேடுகளில் பிரபலமாக இருக்கும் இந்தச் செயலி இப்போது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வந்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: http://www.comicchameleon.com/comics

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

22 days ago

மேலும்