ட்விட்டர் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி நீங்களும் வாக்கெடுப்பு நடத்த வழி செய்கிறது.
‘ ட்விட்டர் போல்ஸ்' எனும் இந்த வசதி மூலம் ட்விட்டர் பயனாளிகள் தாங்கள் பதில் அறிய விரும்பும் கேள்வியைக் கேட்டு ட்விட்டர் ஃபாலோயர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தலாம்.
குறும்பதிவுகளை வெளியிடும் கட்டத்தின் கீழ், வாக்கெடுப்பிற்கான போல்ஸ் (polls) என குறிப்பிடப்பட்டுள்ள சிறிய வட்டத்தை கிளிக் செய்து, கேள்வி மற்றும் அதற்கான பதில்களுக்கான வாய்ப்பை அளித்துப் பயனாளிகள் வாக்களிக்கக் கோரலாம்.
இந்த வாக்கெடுப்பு வசதி தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனாளிகளுக்கு மட்டும் அளிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது அனைத்துப் பயனாளிகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆக, இனி ட்விட்டரில் நீங்கள் எளிதாக வாக்கெடுப்பு நடத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் நடத்தும் வாக்கெடுப்பிலும் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கலாம்.
அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தித் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பை நடத்தியிருக்கின்றனர்.
ட்விட்டர் அறிவிப்பு: https://blog.twitter.com/2015/introducing-twitter-polls
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago