ஜனவரி 1 (நாளை) முதல் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கும் உள்நாட்டு வாய்ஸ் கால் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே இந்த வசதி இருந்துவந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது. மாறாக ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதத்தில் மற்ற நெட்வொர்க் உள்நாட்டு வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) அறிவுறுத்தலின் படி, ஜனவரி 1 முதல் அனைத்து உள்நாட்டு வாய்ஸ் கால்களுக்கும் பயன்பாட்டு கட்டணங்களை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆஃப்-நெட் உள்நாட்டு குரல் அழைப்பு கட்டணங்களை பூஜ்ஜியமாக மாற்றி, ஐயூசி கட்டணங்கள் ரத்து செய்து ஜியோ மீண்டும் 2021 ஜனவரி 1 முதல் அனைத்து வாய்ஸ் கால்களையும் இலவசமாக்கும்" என்று தெரிவித்துள்ளது.
» ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்
» மோசமான டிஜிட்டல் பணியிடமாக ஸொமேட்டோ தேர்வு: தவறை ஏற்றுக்கொண்ட தலைமைச் செயல் அதிகாரி
இதனால், ஏர்டெல், வி (வோடாவோன் ஐடியா) நெட்வொர்க்குகளுக்கு கடும் சவாலான சூழ்நிலை ஏற்படும் என சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
15 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
21 days ago