ஃபேஸ்புக்கின் வாட்ஸ் அப் செயலி பயன்பாடு வியாழக்கிழமை அன்று பாதிக்கப்பட்டது. சர்வதேச அளவில் பல பயனர்கள் இந்தப் பிரச்சினையைச் சந்தித்துள்ளனர்.
முன்னதாக வியாழக்கிழமை காலை அன்று கூகுளின் ஜிமெயில், ட்ரைவ் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டன. வியாழனன்று மாலை வாட்ஸ் அப் செயலி முடங்கியது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர்.
இது குறித்துக் கூறியுள்ள தொழில்நுட்ப இணையதளம் ஒன்று, "சில பயனர்களுக்கு வாட்ஸ் அப் செயலி முடங்கியிருக்கும். சர்வரில் பிரச்சினை இருப்பதால் இந்த சேவையை தற்போது பயன்படுத்த இயலாது. ஆனால் சிலரால் பயன்படுத்த முடியும்" என்று பகிர்ந்தது.
கிட்டத்தட்ட 66 சதவீத வாட்ஸ் அப் பயனர்கள் இந்த பாதிப்பைச் சந்தித்ததாகவும், அதே நேரம் 30 சதவீத பயனர்களால் செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்றும் இப்படியான சேவைகள் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கும் தி டவுன் டிடெக்டர் என்கிற தளம் கூறியுள்ளது. இன்னும் வாட்ஸ் அப் தரப்பிலிருந்து இது குறித்த எந்த விளக்கமும் தரப்படவில்லை.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
8 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
21 days ago