ஜிமெயில், ட்ரைவ் உள்ளிட்ட கூகுள் சேவைகள் பாதிப்பு: மின்னஞ்சல் அனுப்புவதில் சிக்கல்

By ஐஏஎன்எஸ்

ஜிமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை, ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் சரியாக வேலை செய்யவில்லை எனப் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர். இப்படியான சேவைகள் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கும் தி டவுன் டிடெக்டர் போர்டல் என்கிற தளம், 62 சதவீத பயனர்களுக்கு இணைப்போடு வரும் மின்னஞ்சலிலும் இருப்பதும், 25 சதவிதம் பயனர்களுக்கு லாக் இன்னிலும் பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதே நேரம் எல்லா பயனர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை. கூகுள் ஆப்ஸ் ஸ்டேடஸ் பக்கம், தங்களுக்கு ஜிமெயில் மற்றும் கூகுள் ட்ரைவில் பிரச்சினை இருப்பது பற்றிய புகார்கள் வந்துள்ளதாக உறுதி செய்துள்ளது. 11 சதவீத பயனர்களுக்கு மேல், தங்களுக்கு மின்னஞ்சல் வருவதில் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜிமெயில் சர்வர் வேலை செய்யவில்லை, கோப்புகளை இணைக்க முடியவில்லை, வெறும் காலி மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடிகிறது, பல்வேறு கணக்குகளிலிருந்து முயற்சித்தாலும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது எனப் பல்வேறு வகையான புகார்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

இந்தப் பிரச்சினைகள் பற்றி கூகுள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

22 hours ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

19 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

27 days ago

தொழில்நுட்பம்

27 days ago

தொழில்நுட்பம்

28 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்