பாஸ்வேர்டுகள் ஜாக்கிரதை

By சைபர் சிம்மன்

உலகறிந்த ரகசியம்தான், ஆனால் இப்போது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. ஆம், உலகின் மோசமான பாஸ்வேர்ட், எண்களின் வரிசை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது 123456.

பெரும்பாலான இணையவாசிகள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக 12345, abc123 போன்ற பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த பாஸ்வேர்ட்கள் பல ஆயிரக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுவதால் பரவலானதாக இருப்பதுடன், தாக்காளர்கள் எளிதில் கைவரிசை காட்டக்கூடியதாகவும் இருக்கிறது.

இப்படித் தாக்காளர்கள் எந்தச் சிக்கலும் இல்லாமல் திருடக்கூடியவை மோசமான பாஸ்வேர்ட்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் முதல் பத்து இடங்களில் 12345-க்கும் இடமுண்டு, பாஸ்வேர்ட் எனும் பாஸ்வேர்டுக்கும் இடம் உண்டு. ஆம், பாஸ்வேர்டைக் கடவுச்சொல்லாக பயன்படுத்தும் அப்பாவிகளும் அதிகம் இருக்கின்றனர்.

நிற்க, இணைய உலகில் இப்போது ஆஷ்லே மேடிசன் எனும் தகாத உறவு இணையதளமும், அதன் உறுப்பினர் கணக்குகள் தாக்காளர்களால் களவாடப்பட்ட விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தளத்தில் இருந்து களவாடப்பட்ட பாஸ்வேர்ட்களில் ஆயிரக்கணக்கானவற்றைப் பரிசீலித்தபோது எண்களின் வரிசையைப் பலர் பாஸ்வேர்டாகப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

ஆக, பாஸ்வேர்ட் விஷயத்தில் இன்னமும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

10 hours ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

மேலும்