வீசாட் செயலிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள தடையால் சீனாவில் ஐஃபோன் விற்பனை பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.
வாட்ஸ் அப் போல வீசாட் சீனாவைச் சேர்ந்த பிரபலமான செயலி. குறிப்பாக சீனாவில் இதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக அதிகம். சமீபத்தில் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட பல சீன செயலிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்தத் தடையால், ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரிலும் வீசாட் செயலி கிடைக்காது. எனவே ஐஃபோன் பயன்படுத்துபவர்களால் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே இனி ஐஃபோன் விற்பனை சீனாவில் சரிவைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஃபோன் ஏற்றுமதி 25-30 சதவிதம் குறையும் என்று சந்தை நோக்கர்கள் கணித்துள்ளனர். மேலும் ஏர்பாட், ஐபேட், ஆப்பிள் வாட்ச், மேக் உள்ளிட்ட மற்ற தயாரிப்புகளின் விற்பனையும் 15-25 சதவிதம் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது,
ஒரு செயலிக்காக மொபைல் ஃபோனையே ஒதுக்கி வைப்பார்களா என்று கேட்டால், ஆம் என்றே பதில் வருகிறது. ஏனென்றால் வீசாட் சீனாவின் தினசரி அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குறுஞ்செய்தியோடு, பணப் பரிவர்த்தனை, சமூக ஊடகம், செய்திகள் வாசிக்க எனப் பல விஷயங்களுக்கு வீசாட் என்ற ஒரே செயலியை சீன மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அதே நேரம், அமெரிக்காவின் ஆப் ஸ்டோரிலிருந்து மட்டும் வீசாட்டை நீக்கினால் இந்த பாதிப்பு 3-6 சதவிதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 1.44 பில்லியன் மக்கள் இருக்கும் சீனாவில், ஆப்பிள் தயாரிப்புகளின் மொத்த விற்பனையில் 15 சதவித விற்பனை நடக்கிறது.
எனவே சர்வதேச அளவி ஆப் ஸ்டோரில் வீசாட் செயலியை நீக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டால் அது ஆப்பிள் நிறுவனத்துக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 hour ago
தொழில்நுட்பம்
6 hours ago
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago