லேப்டாப் வியாபாரத்திலிருந்து வெளியேறும் டோஷிபா

By ஐஏஎன்எஸ்

ஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான டோஷிபா தனது லேப்டாப் வியாபாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது.

தொடர் பயன்பாட்டுக்கு ஏதுவான நவீன லேப்டாப்புகளுக்கு பிரபலமான டோஷிபா நிறுவனம், தற்போது இந்த வியாபாரத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. 2018-ம் ஆண்டு ஷார்ப் நிறுவனத்துக்கு 80.1 பங்குகளை விற்றிருந்த டோஷிபா, தன்னிடம் மீதமிருக்கும் 19.9 சதவீதப் பங்குகளையும் அந்நிறுவனத்துக்கு விற்றுள்ளது.

"டைனாபுக் பிராண்டில் டோஷிபா நிறுவனத்துக்கு இருந்த 19.9 சதவீதப் பங்குகள் ஷார்ப் நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பரிவர்த்தனையால் டைனாபுக், ஷார்ப் நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் துணை நிறுவனமாக மாறியுள்ளது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1985-ம் ஆண்டு லேப்டாப் சந்தைக்குள் டோஷிபா நுழைந்தது. சாட்டிலைட் என்ற பெயரில் ஐபிஎம் தின்க்பேட் வரிசைக்குப் போட்டியாக லேப்டாப் விற்பனையை ஆரம்பித்தது. 2015-ம் ஆண்டு வரை, அவுட்சோர்ஸ் முறைப்படிதான் உற்பத்தி செய்து வந்தது. அதே நேரம் சீனாவில் இருக்கும் தொழிற்சாலையில் புதிய மாடல் லேப்டாப்புகளை உற்பத்தி செய்து வந்தது.

1990-2000களின் ஆரம்பத்தில் கணினி உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டோஷிபா இருந்து வந்தது. லெனோவா, ஹெச்பி, டெல் ஆகிய நிறுவனங்களின் போட்டியால் டோஷிபாவின் வளர்ச்சி குறுகியது. 2011-ம் ஆண்டு 1.77 கோடி கணினிகளை விற்ற டோஷிபாவால் 2017-ம் ஆண்டு 10.4 லட்சம் கணினிகளை மட்டுமே விற்க முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

6 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

மேலும்