ஹாலிவுட் பட ரசிகரா நீங்கள்?அப்படி என்றால்,அடுத்ததாக என்ன ஆங்கில படம் பார்க்கலாம் என்ற கேள்வி உங்கள் மனதில் அடிக்கடி எழுந்து கொண்டே இருக்கும். இந்த கேள்விக்கு எளிதாக பதில் தேட விரும்பினால் பிலிம்ஹண்ட்( >filmhunt.co)இணையதளம் அதற்காக அழகாக வழிகாட்டுகிறது.
இந்த தளத்தில் நீங்கள் விரும்பும் திரைப்பட வகையை (ஆக்ஷன்,காமெடி,கிளாசிக்) குறிப்பிட்டு அந்த வகையிலான திரைப்படங்களை தேடலாம். பிடித்தமான திரைப்பட வகையை மட்டும் அல்ல, எந்த கால கட்டத்தில் வெளியான படம் தேவை என்றும் குறிப்பிட்டு தேடலாம். திரைப்பட வகையை குறிப்பிட ஒரு கட்டமும், அதன் அருகே கால கட்டத்தை குறிப்பிடுவதற்கான வசதியும் இருக்கிறது. இரண்டையும் குறிப்பிட்ட பிறகு பொருத்தமான படங்களின் பட்டியல் தோன்றுகிறது.
திரைப்படம் பற்றிய சுருக்கமான அறிமுக தகவல்களுடன் இணையத்தில் அதை கட்டணம் செலுத்தி வாங்க முடியுமா என்ற தகவலும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த தகவல்கள் 'திமூவிடேட்டாபேஸ்' தளத்தில் இருந்து பயன்படுத்தப்படுகின்றன என்றாலும் ,விரும்பிய படங்களை எளிதாக அடையாளம் காண இந்த தளம் உதவுகிறது.
இணையதள முகவரி: >http://filmhunt.co
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
17 days ago