ஃபேஸ்புக்கில் இருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கண்டுபிடித்துச் சுட்டிக் காட்டியுள்ள அகமதாபாத் நகரைச் சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளர் பிபின் ஜிதியா என்பவருக்கு அந்நிறுவனம் ரூ. 23.8 லட்ச ரூபாயை (31,500 டாலர்கள்) சன்மானமாக அளித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக மைக்ரோ ஸ்ட்ராடஜி என்ற நிறுவனத்துடன் ஃபேஸ்புக் டேடா அனலிடிக்க்ஸ் திட்டங்களுக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிறுவனம் வடிவமைத்துள்ள ஒரு சோர்ஸ் கோடில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருப்பதைக் கண்டறிந்த பிபின், மைக்ரோ ஸ்ட்ராடஜி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இதை அங்கீகரித்த அந்த நிறுவனம் தற்போது அந்தப் அச்சுறுத்தல் சரிசெய்யப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளது.
"உலகின் மிகப்பெரிய சமூக வலைதளம் ஃபேஸ்புக் என்பதால் அதிலிருக்கும் கோளாறுகளைக் கண்டுபிடிக்க நான் எப்போதும் முயற்சிப்பேன். இம்முறை ஒரு முக்கியமான கோளாறைக் கண்டுபிடித்ததற்காக எனக்கு சன்மானம் அளித்துள்ளனர். கடந்த காலத்திலும் நான் சில கோளாறுகளை அவர்கள் அமைப்பில் கண்டுபிடித்திருக்கிறேன். இந்தியாவில் எதிக்கல் ஹேக்கர்களும், பாதுகாப்பு ஆய்வாளர்களும் நன்றாகத் தேர்ந்துள்ளனர். தங்களது திறமையால் சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்து வருகின்றனர்" என்று பிபின் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் இணைய பாதுகாப்பு ஆய்வுக்கான அணியில் வேலை கிடைத்தால் செல்வீர்களா என்று கேட்டதற்கு, தான் இந்தியாவிலேயே இருந்து இந்திய நிறுவனங்களிலேயே வேலை செய்ய விரும்புவதாக பிபின் கூறியுள்ளார்.
இதே போல கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் அமைப்பில், பயனர்களின் கணக்குகளுக்கு அச்சுறுத்தல் இருக்கும் ஒரு பிரச்சினையை, இந்தியாவைச் சேர்ந்த பாவுக் ஜெயின் கண்டுபிடித்துச் சொன்னார். இதற்காக அவருக்கு கிட்டத்தட்ட ரூ.75.5 லட்சம் சன்மானம் கிடைத்தது (1 லட்சம் டாலர்கள்)
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago