ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவையின் சந்தாதாரர்கள் பற்றிய தகவல்கள் ஒரு ஹேக்கரால் திருடப்பட்டன என்ற செய்தியை அந்நிறுவனம் மறுத்துள்ளது. மேலும் இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஜான் விக் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட கொரியாவைச் சேர்ந்த ஒரு ஹேக்கர், ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவையிலிருந்து 150 ஜிபி அளவிலான பயனர்களின் தரவுகளைத் திருடியுள்ளதாகவும், மேலும் ஜீ 5 இணையதளத்தை இயங்க வைக்கும் சோர்ஸ் கோட் எனப்படும் கணினிக்கான குறிமுறையாக்கத்தைத் திருடியுள்ளதாகவும் இணையப் பாதுகாப்பு செய்திகளைத் தரும் குயுக் சைபர் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. மேலும் தான் திருடிய தகவல்களை விற்பனைக்கு வைக்கவிருப்பதாகவும் இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜீ 5 தரப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் துஷார் வோஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக ஓடிடி துறையும் சரி, அதன் மீதான ஹேக்கர்களின் ஆர்வமும் சரி பெரிய அளவு வளர்ந்துள்ளது. குறிப்பாக கோவிட்-19 தொற்றுப் பிரச்சினைக்குப் பிறகு, தரவுகளைத் திருடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கவன ஈர்ப்புக்காக செய்யப்படும் சுயநலமான செயல்.
» உங்கள் பிரச்சார வீடியோவை முடக்கியது சட்டவிரோதம் அல்ல: ட்ரம்ப்புக்கு ட்விட்டர் பதில்
» இனவாதி என்று தேடினால் டொனால்ட் ட்ரம்ப்பின் பக்கத்தைக் காட்டும் ட்விட்டர்; காரணம் என்ன?
கட்டணம் செலுத்துதலையொட்டிய பயனர்கள் தொடர்பான அதி முக்கியத் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. ஜீ 5 தளத்தின் கட்டமைப்பு நவீனமானது, வலிமையானது. நாங்கள் தொடர்ந்து பாதுகாப்பான தொழில்நுட்பத்துக்காக அதிகம் முதலீடு செய்யவிருக்கிறோம். பயனர்களின் தரவுகளைப் பாதுகாக்க முன்னணி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். அவை என்றும் திருடப்பட முடியாது என்பதி உறுதி செய்துள்ளோம்".
இவ்வாறு ஜீ 5 தரப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜீ 5 ஸ்ட்ரீமிங் சேவைக்கு உலக அளவில் 15 கோடி சந்தாதாரர்கள் இருக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
18 days ago