கூகுளுக்குச் சொந்தமான யூடியூப், யுபிஐ முறையில் கட்டணம் செலுத்து வசதியை யூடியூப், யூடியூப் மியூஸிக் என இரண்டு தளங்களிலும் அறிமுகம் செய்துள்ளது.
யூடியூப் ப்ரீமியம், யூடியூப் மியூஸிக் ப்ரீமியம் போன்ற சேவைகளுக்குப் பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் போன்ற முறையில் இந்தக் கட்டணத்தைச் செலுத்தப் பயனர்களுக்கு வசதி தரப்பட்டிருந்தது. தற்போது யுபிஐ மூலமாகவும் பயனர்கள் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ப்ரீமியம் சேவைகளைப் பயன்படுத்துவதோடு தங்களுக்குப் பிடித்த படத்தை வாங்குதல், வாடகைக்கு எடுத்தல், சூப்பர் சாட் போன்ற அம்சங்களுக்குப் பணம் செலுத்துதல், யூடியூப் சேனலுக்கு பணம் கட்டி சந்தா செய்தல் உள்ளிட்ட எல்லா வகையான பரிவர்த்தனைகளுக்கும் யுபிஐ முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முன்னதாக, யூடியூப் மியூஸிக்கில் பயனர்களின் தனிப்பட்ட விருப்பத்துக்கு ஏற்றவாறு பாடல் பட்டியல்களை அறிமுகம் செய்திருந்தது. இதில் டிஸ்கவர் மிக்ஸ் என்ற பாடல் பட்டியலில் ஒவ்வொரு வாரமும் 50 பாடல்கள் புதிதாகச் சேர்க்கப்படும். நியூ ரிலீஸ் மிக்ஸ் என்ற பட்டியலில் புதிதாக அறிமுகமான பாடல்கள் இருக்கும். யுவர் மிக்ஸ் என்ற பட்டியலில் பயனருக்கு விருப்பமான, தெரிந்த இசைக் கலைஞர்களின் பாடல்கள் இடம்பெற்றிருக்கும்.
» ஏப்ரலில் 80 சதவீதம் குறைந்த இந்தியப் போக்குவரத்து: ஆப்பிள் மேப்ஸ் தகவல்
» ’கரோனா ஸ்ட்ரைக்கர்’ - புதிய விழிப்புணர்வு விளையாட்டு அறிமுகம்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago