லாஸ் ஏஞ்சல்ஸ்
40 நிமிடங்களுக்குள் 80 சதவீத ரீசார்ஜ் செய்துகொள்ளும் திறன்மிக்க 'எக்ஸ் சி 40' என்ற காரை வோல்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் எவ்வளவு விலை என்று இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எக்ஸ் சி 40 என்ற வகை கார்கள் ஆண்ட்ராய்டு - அமைப்பில் இயங்கும் ஹைபிரிட் கார்கள் ஆகும்.
வோல்வோ நிறுவனத்தின் டிஜிட்டல் இணைக்கப்பட்ட சேவை தளமான 'வோல்வோ ஆன் கால்' உடன் முழுமையாக இந்தக் காரின் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வடிவமைப்பு காரின் ஓட்டுநர்கள் மின்சாரத்தில் எவ்வளவு தூரத்திற்கு எவ்வளவு நேரத்திற்கு மின்சாரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதை 'வோல்வோ ஆன் கால் பிளக்' இன் வழியாக கண்காணிக்க முடியும்.
வோல்வோ எக்ஸ் 40 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி ரீசார்ஜ் வரைபடம்
இதுகுறித்து வோல்வோ தலைமை நிர்வாக அதிகாரி ஹக்கன் சாமுவேல்சன் கூறியதாவது:
''வோல்வோ கார்களைப் பொறுத்தவரை அதன் எதிர்காலம் மின்சார மயமானது என்று பலமுறை கூறியுள்ளோம். இன்று நாங்கள் எங்கள் முழு மின்சார எக்ஸ்சி 40 மற்றும் ரீசார்ஜ் கார் வரிசையை அறிமுகப்படுத்துவதன் மூலம் அத்திசையில் ஒரு புதிய படியில் காலடி எடுத்து வைக்கிறோம்.
வோல்வோ அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முழுமையான மின்சார காரை அறிமுகம் செய்வதாக உறுதியளித்துள்ளது. ஏனெனில் 2025 ஆம் ஆண்டில் அனைத்து - மின்சார கார்களையும் உலகளாவிய விற்பனையில் 50 சதவீதமாக மாற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மின் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வகை மாதிரியில் உள்ள ஒவ்வொரு வோல்வோ ரீசார்ஜ் பிளக்கும் ஒரு வருடத்திற்கு இலவச மின்சாரத்துடன் வழங்கப்படுகிறது. அந்த ஒருவருட காலகட்டத்தில் சராசரி மின்சார செலவு மதிப்புள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் வழங்கப்படும்.
ரீசார்ஜ் கார்களுக்கான தேவைக்கான எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியை பூர்த்தி செய்ய, மின்மயமாக்கப்பட்ட கார்களுக்கான உற்பத்தித் திறனை வோல்வோ கார்கள் மூன்று மடங்காக அதிகரிக்கும்.
2020 ஆம் ஆண்டில் தயாராகும் மொத்த ஹைப்ரிட் பிளக் பொருத்திய கார்களில் 20 சதவீதத்தை வோல்வோ நிறுவனம் உற்பத்தி செய்து தரும் என்று நம்பிக்கை உள்ளது''.
இவ்வாறு வோல்வோ தலைமை நிர்வாக அதிகாரி ஹக்கன் சாமுவேல்சன் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
17 hours ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago