ட்விட்டரின் திடீர் முடக்கத்தால் நெட்டிசன்கள் அவதி

By செய்திப்பிரிவு

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், திடீரென முடங்கியுள்ளதால் நெட்டிசன்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று ட்விட்டர். இதை அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சர்வதேச பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் வலைதளம் இந்தியாவில் திடீரென முடங்கியுள்ளது. அதேபோல ட்வீட் டெக் வசதியும் தனது செயல்பாட்டை இழந்துள்ளது.

இதனால் நெட்டிசன்கள் 'ட்வீட் செய்யமுடியவில்லை, குறுஞ்செய்திகளையோ, புகைப்படங்களையோ அனுப்ப முடியவில்லை' என்று தெரிவித்துள்ளனர். அதேபோல மொபைலில் ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் செயலியிலும் ட்விட்டர் வேலை செய்யவில்லை.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ட்விட்டர் சப்போர்ட், ''ட்விட்டர் மற்றும் ட்வீட் டெக் பயன்பாட்டில் முடக்கத்தை உணர்ந்துள்ளோம். இதனால் பயனர்களால் வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியாது. இதைச் சரிசெய்யும் பணிகளில் உள்ளோம். விரைவில் ட்விட்டர் வழக்கமான பயன்பாட்டுக்கு வரும்'' என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று, வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளில் ட்விட்டர் திடீரென முடங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

16 hours ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

மேலும்