புதிய ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைல்களின் இந்திய விலைகள் 

By பா.பிரகாஷ்

ஒவ்வோராண்டும் செப்டம்பர் மாதம் ஐபோன் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 புதிய 11 சீரிஸ் ஐபோன்கள், ஆப்பிள் ஆர்க்காடு கேமிங், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7-ம் ஜெனரேஷன் ஐபாட் ஆகியவற்றை அறிமுகம் செய்தது.

ஆப்பிள் ஐபோன் 11-ன் அடிப்படை விலை ரூ.64,900, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸின் விலை ரூ.99,990 என வெளியிட்டுள்ளனர். புதிய மொபைல்கள் வெளியிட்டதால் இதற்கு முன்னால் வெளியிட்ட ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்ஆர் விலையை 20,000 ரூபாய் குறைந்துள்ளது. இதுமட்டுமின்றி ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ்ஸின் விலையையும் ரூபாய் 10,000 குறைந்துள்ளது.

ஐபோன் 11 சீரிஸில் ஏ 13 பயோனிக் ப்ராஸசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ப்ராஸசர் அதிவேகமான ப்ராஸசராக கருதப்படுகிறது. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகிய சீரிஸ்களில் வண்ணங்களும் வெவ்வேறு கிடைக்கின்றன.

ஐபோன் 11:

கறுப்பு, வெள்ளை, லாவெண்டர், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை. (black, white, lavander, red, yellow and green)

ஐபோன் 11 ப்ரோ வகை:

மிட்நைட் கிரீன், ஸ்பேஸ் கிரே, சில்வர் மற்றும் கோல்ட் நிறங்களில் கிடைக்கின்றன. ( Midnight green, space grey, silver and gold)

ஐபோன் 11 சீரிஸின் விலைப் பட்டியல்:

மாடல்

விலை

ஐபோன் 11 64 ஜிபி 64,900 ரூபாய் ஐபோன் 11 128 ஜிபி 69,900 ரூபாய் ஐபோன் 11 256 ஜிபி 79,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ 64 ஜிபி 99,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ 256 ஜிபி 1,13,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ 512 ஜிபி 1,31,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 64 ஜிபி 1,09,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி 1,23,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி 1,41,900 ரூபாய்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

19 hours ago

தொழில்நுட்பம்

19 hours ago

தொழில்நுட்பம்

23 hours ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்