இது இன்ஸ்டாகிராம் சாதனை

By சைபர் சிம்மன்

ஒளிப்படப் பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் அதிகம் விரும்பப்பட்ட ஒளிப்படத்தை வெளியிட்டவர் எனும் பெருமையை அமெரிக்க மாடலழகி கெண்டல் ஜென்னர் பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துகொண்ட படம் ஒன்று 26 லட்சம் லைக்குகளை அள்ளியிருக்கிறது.

தலைமுடியை இதயம் வடிவில் படர விட்டபடி அவர் படுத்திருப்பது போல தோன்றும் இந்த ஒளிப்படம்தான் ஒரு மாத காலத்துக்குள் லட்சக்கணக்கானவரைக் கவர்ந்திழுத்திருக்கிறது.

இதற்கு முன்னர் அமெரிக்க நடிகையான கிம் கர்தாஷியான் பகிர்ந்துகொண்ட திருமண ஒளிப்படம்தான் இன்ஸ்டாகிராமில் 24 லட்சம் லைக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது அவருடைய சகோதரியான ஜென்னர் அதை முறியடித்திருக்கிறார்.

இந்தத் தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

தொழில்நுட்பம்

13 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

18 days ago

மேலும்