கேம்ஸ் கார்னர்

By ரிஷி

ஃபால் அவுட் ஷெல்டர்

ஃபால் அவுட் என்பது 1997-களில் வெளியான வீடியோ கேம். இந்த கேமின் லேட்டஸ்ட் வெர்ஷன் ஃபால் அவுட் ஷெல்டர். இது ஜூன் 2015 அன்று வெளியானது. முதலில் ஐ ஃபோன்களில் மட்டும் கிடைத்தது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த கேம் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இலவசமாகக் கிடைக்கும். உலகத்தின் பேரரழிவுக்குப் பின்னர் ஒரு இருப்பிடத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இந்த கேமில் கிடைக்கும். பின்னர் அதில் குடியேறியவர்களைச் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் விளையாட்டு. எளிதாகச் சொல்லிவிட்டாலும் இந்த விளையாட்டில் நீங்கள் பல தந்திரங்களைச் சமாளித்தாக வேண்டும்.

ஸ்டுப்பிட் ஜாம்பீஸ் 3

கேம் ரிஸார்ட் நிறுவனம் ஜூலை 3-ல் வெளியிட்ட கேம் ஸ்டுப்பிட் ஜாம்பீஸ் 3. மொத்தம் 100 லெவல்கள் உள்ளன. இதைவிட அதிக லெவல்கள் உருவாக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். இதில் மூன்றுவிதமான துப்பாக்கிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி எதிரிகளைச் சுட்டு வீழ்த்தி நீங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். வசீகரமான கிராபிக்ஸ் உதவியால் விறுவிறுப்பான கேமாக இதை உருவாக்கியுள்ளார்கள். முதலில் வெளியான இரண்டு கேம்களிலிருந்து மாறுபட்டதாக உள்ளது இது என்கிறார்கள். ஆனாலும் ஸ்டுப்பிட் ஜாம்பீஸ் 2-வுக்குக் கிடைத்த வரவேற்பு இதற்குக் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது. இதை டவுண்லோடு செய்ய: https://goo.gl/cyRUy2

டாப் ஸ்பீடு: ட்ராக் அண்ட் ஃபாஸ்ட் ரேஸிங்

டிபுல் நிறுவனம் ஜூலை 22-ல் வெளியிட்ட கேம் டாப் ஸ்பீடு: ட்ராக் அண்ட் ஃபாஸ்ட் ரேஸிங். இது ஆப்பிள் ஸ்டோர், கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றிலும் விண்டோஸ் ஃபோனிலும் இலவசமாகக் கிடைக்கிறது. கார் பிரியர்களைச் சுண்டியிழுக்கும் கேம் இது. இதில் மொத்தம் 69 வகையான கார்கள் உள்ளன. உலகத்தில் உள்ள அனைத்து வகையான போலீஸ் கார்களும் இதில் கிடைக்கின்றன. 5 வெவ்வேறு வகையான மாவட்ட சாலைகளில் உங்கள் பயணத்தை நடத்தலாம். ஒவ்வொன்றும் கலக்கலான சவுண்ட், விஷுவல், கிராபிக்ஸில் மாறுபட்ட தீம்-ஐக் கொண்டதாக இருக்கும். ஆனால் டேட்டாவை அதிகம் காலிபண்ணுவதாகக் கூறுகி றார்கள். இதை டவுன்லோடு செய்ய: https://goo.gl/12YkJk

சுடோகு

பத்திரிகைகளில் வெளிவரும் சுடோகு கேம்களைப் பார்த்திருப்பீர்கள். விளையாடியும் இருப்பீர்கள். பல வகையான சுடோகு கேம்கள் ஆண்ட்ராய்டிலேயே கிடைக்கின்றன. வோல்கனோ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஜூலையில் சுடோகு ஃப்ரீ என்னும் கேமை வெளியிட்டிருக்கிறது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேம்கள் உள்ளன. அதனால் விதவிதமாக விளையாடி மகிழலாம். பொழுதுபோகாத நேரங்களில் உங்கள் கவனத்தை ஒருங்குவிக்க இந்த கேம் உதவும். இதை டவுன்லோடு செய்ய: https://goo.gl/oylLC3

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

22 days ago

மேலும்