தொழில்நுட்ப உலகில் மல்டி டாஸ்கிங் எனும் பதம் பிரபலம். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. இணையத்தில் உலாவிக்கொண்டே பின்னணியில் பாட்டுக் கேட்பது, அலுவலக சகாவுடன் உரையாடியபடி கையில் செல்போனில் வாட்ஸ் ஆப் செய்திகளுக்குப் பதில் அளிப்பது தொடங்கி பல உதாரணங்களைச் சொல்லலாம்.
நம்மில் பலரும்கூட இப்படி மல்டி டாஸ்கிங் மன்னர்கள் என காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளத் தயாராக இருக்கலாம்.
ஆனால், உண்மையிலேயே இந்த வகை திறமை சாத்தியமா? அதாவது ஒரே நேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்வதைத் தொழில்நுட்பம் மூலம் கைவரப்பெற்றிருக்கிறோமா? இதற்கான பதில் மல்டி டாஸ்கிங் பிரியர்களுக்கு ஏமாற்றம் தரலாம். இப்படி ஒரே நேரத்தில் பல வேலைகளைத் திறம்படச் செய்வது பெரும்பாலும் பலருக்கு சாத்தியம் இல்லை என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அமெரிக்கப் பேராசிரியர் டேவிட் ஸ்டிரேயர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்ய முடிவதாகப் பலரும் நினைக்கலாம்தான். ஆனால், அப்படிச் செய்யும் வேலைகளின் செயல்திறன் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் பார்த்தால் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே இந்த ஆற்றல் இருப்பதாகவும் எஞ்சிய 98 சதவீதம் பேர் ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போது வேறு வேலையைச் செய்தால் ஏதாவது ஒன்றைச் சொதப்பிவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த 2 சதவீதம் பேர்தான் சூப்பர் டாஸ்கர்கள் என வர்ணிக்கப்படுகின்றனர்.
ஏற்கனவே ஒரு முறை இது தொடர்பான ஆய்வு நடைபெற்ற நிலையில் பேராசிரியர் ஸ்டிரேயர் மீண்டும் இந்த ஆய்வை நடத்தியிருக்கிறார். பழைய ஆய்வில் பங்கேற்ற சூப்பர் டாஸ்கர்களில் 5 பேரும் மூன்று புதியவர்களும் புதிய ஆய்வில் பங்கேற்றுள்ளனர். இவர்களைத் தவிர மேலும் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆய்வின்போது பங்கேற்பாளர்கள் திரையில் தோன்றும் கட்டத்தையும் அதில் மாறிக்கொண்டிருக்கும் நிறத்தையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் ஆடியோவில் கேட்கும் குறிப்புகளையும் காதில் வாங்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஆடியோ குறிப்பை நினைவில் நிறுத்திக் கட்டங்களின் நிலையைச் சரியாகச் சொல்ல வேண்டும்.
இந்தச் சோதனையில் 2 சதவீதம் பேர் மட்டும் திறம்படச் செயல்பட்டுள்ளனர். மற்றவர்கள் குழம்பித் தவித்துள்ளனர்.
இதற்குப் பேராசிரியர் சொல்லும் விளக்கம் பலவேலைகள் செய்யும் திறன் பெற்றவர்களின் மூளை செயல்படும் விதம் மாறுபட்டதாக இருக்கிறது என்பதாகும். சோதனையின்போது பங்கேற்பாளர்களின் மூளைச் செயல்பாட்டை ஆய்வு செய்து இந்த முடிவை முன்வைத்துள்ளார்.
இந்தக் கருத்தைச் சோதிக்க விரும்பினாலும் சரி அல்லது உங்கள் மல்டி டாஸ்கிங் திறனைச் சரி பார்க்க விரும்பினாலும் சரி அதற்கு ஆன்லைன் சோதனை இருக்கிறது. சில்வர் பே லேப்ஸ் நிறுவனம் உருவாக்கிய அந்தச் சோதனையில் ஆரம்பத்தில் ஒரு கட்டமும் தோன்றும். கூடவே அதில் உள்ள எழுத்துக்கான ஆடியோ பதிவு கேட்கும். இரண்டையும் நினைவில் கொள்ள வேண்டும். அடுத்ததாக இன்னொரு கட்டம் இன்னொரு எழுத்தும் தோன்றிய. அதற்கான ஆடியோ கேட்கும். பின்னர் முன்னர் மூன்றாவதாகத் தோன்றிய கட்டத்தில் இடம்பெறும் எழுத்தும் கேட்கும் ஒளியும் ஏற்கனவே பார்த்ததும் கேட்டதும்தானா என உறுதிப்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு கட்டமாக முன்னேற வேண்டும்.
ஆன்லைன் சோதனைக்கு: >http://www.soakyourhead.com/
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago