யூடியூப்பில் வீடியோக்கள் வைரலாகி ஹிட்டாவது புதிதல்ல என்றாலும் காணொலிக் கலைஞரான ஜானி லாசனின் அருவி வீடியோ அவற்றில் தனித்து நிற்கிறது. இந்த வீடியோ இதுவரை 60 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. யூடியூப் அளவுகோல்படி பார்த்தால் இது பெரிய எண்ணிக்கை இல்லைதான். ஆனால் இந்த வீடியோவின் தனிச்சிறப்பு அதன் நீளமும் அதனால் ஏற்படும் விளைவும்தான்.
ஆம், நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே பெரும்பாலும் சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் குவிக் பைட் ரகங்கள். இதற்கு மாறாக ஜானி லாசனின் வீடியோ எட்டு மணி நேரம் ஓடக்கூடியது. அதைவிட ஆச்சரியம் அந்த வீடியோ ஏற்படுத்திவரும் விளைவு. தூக்கமில்லாமல் தவிக்கும் பலரை அந்த வீடியோதான் தாலாட்டித் தூங்க வைக்கிறது. இந்த வீடியோ ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக மருத்துவமனை ஒன்றில் இதைத் தூக்கமின்மை தொடர்பான ஆய்வுக் கருப்பொருளாகச் சேர்த்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
அயர்லாந்தின் மாசுபடாத லிட்ரீம் கிராமப் பகுதியில் உள்ள வன அருவியை வீடியோவாகப் பதிவுசெய்துள்ளார் ஜானி லாசன். இந்த வீடியோவைப் பார்க்கும்போது நாமே மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருப்பதுபோல உணர்வு ஏற்படுகிறது. இடையே நீரின் சலசலப்பும் பறவைகளின் சங்கீதமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.
லட்சக்கணக்கானோர் நகரத்து வாழ்வின் நெருக்கடியை மறந்து இந்த வீடியோவைப் பார்த்து லயித்திருக்கின்றனர். பலர் இந்த வீடியோ தரும் ஆறுதலால் தங்கள் தூக்கமின்மையை மறந்து நன்றாகத் தூங்கியிருக்கின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருக்கும் பலரும் நடுவிலேயே தூங்கிவிடுகின்றனர். பின்னர் திடீரெனக் கண் விழித்துப் பார்த்தால் வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். அது தரும் இதத்தால் மீண்டும் தானாகத் தூக்கம் வந்துவிடும் என்கிறார் வீடியோவை உருவாக்கிய ஜானி லாசன். அதனால்தான் இந்த வீடியோவை 8 மணி நேரம் ஓடக்கூடியதாகப் படம் பிடித்ததாகவும் சொல்கிறார்.
லாசன் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனது முதல் இயற்கை வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றினார். மக்களின் வாழ்க்கையில் இயற்கையை இணைப்பது அவரது நோக்கமாக இருக்கிறது. இயற்கையின் எழில் கொஞ்சும் பகுதியில் வசிக்கக்கூடிய அதிர்ஷ்டம் தனக்கு வாய்த்திருப்பதால் அதை யூடியூப் வீடியோவாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதாகச் சொல்கிறார்.
லானின் அருவி வீடியோ
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago