ஸ்மார்ட் போன் பேட்டரியில் அறிமுகமாகியுள்ள தொழில்நுட்பம் பற்றிக் கேள்விப்பட்டால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் அதன் வேகம் அப்படி. ஒரு நிமிடத்தில் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
ஸ்டான்போர்ட் ஆய்வாளர்கள் புதிதாக ஒரு அலுமினியம் பேட்டரியை உருவாக்கியுள்ளனர். இந்த பேட்டரி எதிர்மறை ஆற்றல் கொண்ட அலுமினிய ஆனோட் மற்றும் கிராபைட்டிலான கேத்தோடைக் கொண்டுள்ளது. பொதுவாக ஆல்கலைன் மற்றும் லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளே பயன்பாட்டில் உள்ளன.
இவற்றில் ஆல்கலைன் பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை, லித்தியம் பேட்டரிகள் தீப்பிடிக்கும் அபாயம் கொண்டவை. அலுமினியம் பேட்டரி தொடர்பான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடந்து வந்தாலும் அதிக முறை சார்ஜ் செய்யக்கூடியதாக அவற்றை உருவாக்குவது சவாலாக உள்ளது.
இந்நிலையில் 2 வோல்ட் சார்ஜ் திறன் கொண்ட அலுமினியம் பேட்டரிகளை ஸ்டான்போர்டில் உருவாக்கியுள்ளனர். இந்த பேட்டரி ஒரு நிமிடத்தில் சார்ஜை நிரப்பிக்கொள்ளும் என்பதோடு இதை வளைத்தாலும் பாதிப்பு ஏற்படாத தன்மை கொண்டிருக்கிறது. இதில் துளையிட்டாலும் தீப்பிடிக்காதாம்.
7,500 சார்ஜிங் சுழற்சிக்கு இது தாக்குப்பிடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் உற்சாகமாகக் கூறுகின்றனர். எதிர்காலத்தில் இவை ஸ்மார்ட் போனில் பயன்பாட்டிற்கு வரலாம் என்றும் இன்னும் உற்சாகமாகச் சொல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
26 days ago
தொழில்நுட்பம்
30 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago