இந்தியாவில் ஜியோனி புதிய போன்

By சைபர் சிம்மன்

ஜியோனி நிறுவனம் ஸ்லிம் போன்களுக்குப் பெயர்பெற்றது. இந்நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போனான எலைஃப் எஸ்7 மாதிரியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜியோனியின் எலைஃப் எஸ்5.5 மற்றும் எலைஃப் எஸ்5.1, ஆகிய மாதிரிகளின் தொடர்ச்சியான இந்த மாதிரி பார்சிலோனா மொபைல் கண்காட்சியில் அறிமுகமானது. இப்போது இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இரட்டை சிம் வசதி கொண்ட இந்த போன் 5.5 மி.மி. தடிமன் கொண்டது. 5.5 அங்குல டிஸ்பிளே கொண்டது. ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 இயங்குதளத்துடன் வந்துள்ளது. 13 மெபி பின்பக்க காமிரா மற்றும் 8 மெபி முன் பக்க காமிராக்களைக் கொண்டிருக்கிறது. 2ஜி,3ஜி, 4ஜி என எல்லா வசதிகளும் இருக்கின்றன. இதன் விலை ரூ.24,999.

நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்ய இருக்கும் எலைஃப் இ8 ஜூன் மாத வாக்கில் இந்தியாவிலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எலைஃபி இ7 அறிமுகம் செய்யப்பட்ட 18 மாதங்களுக்குப் பிறகு இது அறிமுகமாக உள்ளது. இது வெறும் மேம்படுத்தப்பட்ட மாதிரியாக இல்லாமல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என ஜியோனி தெரிவித்துள்ளது.

இதனிடையே ஜியோனி இந்தியாவிலேயே தனது போன்களை உற்பத்திசெய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் தனது ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் குழுவையும் விரிவாக்க உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

26 days ago

தொழில்நுட்பம்

29 days ago

தொழில்நுட்பம்

30 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்