ஸ்மார்ட் போன்களுக்கு நிகராக ஸ்மார்ட் வாட்ச் சந்தையும் போட்டி மிகுந்ததாகிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் எம்வியோவும் சேரவிருக்கிறது. ஆனால் மற்ற ஸ்மார்ட் வாட்ச்கள் போலப் பல அம்சங்களை அடைக்க முயலாமல் நெத்தியடியாகக் குறிப்பிட்ட ஒரு அம்சத்தில் மட்டும் எம்வியோ ஸ்மார்ட் வாட்ச் கவனம் செலுத்துகிறது.
எம்வியோவில் நோட்டிபிகேஷன், விதவிதமான செயலிகள் எல்லாம் கிடையாது. இந்த வாட்ச் அதை அணிபவரின் இதயத்துடிப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து அதில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும்போது மட்டும் தகவல் அளிக்கும். அத்தோடு தினமும் உங்கள் மன அழுத்த அளவைக் கணக்கிட்டு அதன் ஏற்ற இறக்கம் பற்றி அறிக்கையும் அளிக்கிறது.
மன அழுத்தம் அதிகரித்தால் நமக்கே தெரியாதா என நீங்கள் நினைக்கலாம். மன அழுத்த அளவு கணிசமாக இருக்கும் போது தெரியும். ஆனால் பல நேரங்களில் ஒருவர் கவனிக்காத அளவுக்கு மிதமான மன அழுத்தத்தை அனுபவிக்கலாம். இவற்றை எல்லாம் கண்ணும் கருத்துமாகக் கவனித்து அளவிட்டுச் சொல்லும் வகையில் எம்வியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.
மன அழுத்த அளவு அதிகரித்தால் அதைக் குறைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறது. சுவாரஸ்யமான ஸ்மார்ட் வாட்ச்தானே! அந்த நம்பிக்கையில்தான் கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் நிதி கேட்டு வந்திருக்கிறது. தேவையான நிதி கிடைத்தால் இரண்டு அளவுகளில் விற்பனைக்கு வர உள்ளது.
எம்வியோவின் கிக்ஸ்டார்ட்டர் பக்கம்:
>https://www.kickstarter.com/projects/993110774/emvio-the-first-watch-to-measure-and-manage-your-s
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
19 days ago