எலெக்ட்ரிக் கார்கோ பைக்

By செய்திப்பிரிவு

எலெக்ட்ரிக் கார்கோ பைக்

சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதுதான் எல்லோருக்கும் ஆசை. ஆனால் வாங்கவேண்டும் என்றால் விலை அதிகமாக இருக்கிறது என்கிற வருத்தம் இருக்கும். அந்த குறையை போக்கும் விதமாக வந்துள்ளது எலெக்ட்ரிக் கார்கோ பைக்.

ஜொகன்சன் என்கிற அமெரிக்க நிறுவனம் இந்த வாகனத்தை அறிமுகப்படுத்துகிறது. குழந்தைகள், விளையாட்டு வீரர்கள் இருவருமே பயன்படுத்த முடியும் என்பதுதான் இதன் சிறப்பு.

கனவு பாரீஸ்!

2050ல் பாரீஸ் நகரம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு வரைபடத்தை வெளியிட்டுள்ளது பிரான்ஸைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம். நகரின் பாரம்பர்யம் மாறாமல் பசுமை நகரமாக மாற்றுவது எப்படி என்கிறது இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள வரை படங்கள்.

இயற்கை வழியில் மின் உற்பத்தி, மழை நீர் சேகரிப்பு வசதி, நகரில் எங்கு பார்த்தாலும் பசுமை என மிக அழகான நகரமாக இருக்கிறது இந்த நிறுவனத்தின் கனவு. இதற்கு கனவு 2050 என்றும் பெயர் வைத்துள்ளனர்.

பேட்டரி டூத் பிரஷ்

தொழில்நுட்பம் வளர வளர நமது வாழ்வில் அதன் ஆதிக்கம் அதிகரித்து கொண்டுதானிருக்கும் இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கவும் இப்போது நவீன தொழில்நுட்பத்தில் செயல்படும் பல் துலக்கியை (டூத் பிரஷ்) அறிமுகப்படுத்தியுள்ளது பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் அங்கமான ஓரல் பி.

இந்த பேட்டரியில் செயல்படும் பல் துலக்கி செல்போனின் புளூ டூத் கட்டுப்பாட்டில் செயல்படக்கூடியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தியச் சந்தையிலும் இது அறிமுகமாக உள்ளது. உங்கள் பல்லை எவ்வளவு நேரம் துலக்க வேண்டும், சரியாக துலக்குகிறீர்களா என்பதற்கான அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் பல் டாக்டரின் ஆலோசனையின்படி டவுன்லோட் செய்ய வேண்டும்.

மொபைலிலிருந்து வரும் கட்டளையின்படி இந்த பிரஷ் செயலாற்றும். இரவில் நீங்கள் பல் துலக்கிவிட்டேன் என்று பல் டாக்டரிடம் பொய் சொல்ல முடியாது. மொபைல் அப்ளிகேஷன் உங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.

ஸ்கூட்டரா, பைக்கா?

எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்கள் பெரும்பாலும் இளைஞர்களை கவருவதில்லை. வேகமும் இருக்க வேண்டும், பார்த்த உடனே வடிவமைப்பும் ஈர்க்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் நிற்கும். இந்த குறைகளை களைந்தது பனிச்சறுக்கு மற்றும் சாகச விளையாட்டு வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிபிஜி.

அதிலும் ஒரே நேரத்தில் பைக்காகவும் ஸ்கூட்ராகவும் மாற்றிக் கொள்ளக்கூடியதாகவும் இந்த மோட்டார் சைக்கிளை வடிவமைத்தது. மோட்டார் சைக்கிள் போலவே இருக்கும் இதன் முன் சக்கரத்தை தேவைக்கு ஏற்ப மடக்கிக் கொள்ள முடியும். இப்படி சக்கரத்தை மடக்கிய நிலையில் ஸ்கூட்டர் போலவும் ஓட்டிச் செல்லலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

22 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

18 days ago

மேலும்