சாம்சங்கின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்

சாம்சங்கின் டைசன் ஸ்மார்ட் போன் ஜனவரி 18 அன்று அறிமுகமாகலாம் என்றும் இதன் விலை 90 டாலர் அதாவது ரூ.5,700 அளவுக்கு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சாம்சங்கின் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் ஆண்ட்ராய்டு போன்களாக இருந்தாலும் லின்கஸ் அடிப்படையிலான டைசன் இயங்குதளத்தைக் கொண்ட புதிய ஸ்மார்ட் போனை சாம்சங் உருவாக்கி வருவதாகப் பல மாதங்களாகச் செய்திகள் உலா வருகின்றன.

இசட் 1 எனக் குறிப்பிடப்படும் இந்த போன் பற்றி கொரிய நாளிதழ் ஒன்று புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது. முதலில் இருந்த திட்டத்தை மாற்றிக்கொண்டு சாம்சங் இந்த போனைக் குறைந்த விலைப் பிரிவில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்தியாவில்தான் இதை வெள்ளோட்டம் விட இருப்பதாகவும் கொரிய நாளிதழ் தெரிவிக்கிறது.

4 இன்ச் டிஸ்பிளே, 1.2 GHz பிராசஸர், 512 ரேம், 3.2 மெகாபிக்சல் காமிரா , முன்பக்க காமிரா ,இரட்டை சிம், 3 ஜி வசதி ஆகிய அம்சங்கள் இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுக்கு ஏற்ற உள்ளூர் வீடியோ மற்றும் இசை ஆகியவற்றையும் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 6,000 ரூபாய்க்கு குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஒன் போன்களுடன் இந்த போன் மல்லுகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மகேஷ் டெலிகாமின் மனிஷ் கத்தாரி, புதிய போன் பற்றிய விவரங்களை டிவிட்டரில் புகைப்படங்களோடு வெளியிட்டிருக்கிறார். ஸ்மார்ட்போன் உலகில் ரகசியம் என்பதே கிடையாது போலும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE