சமூகவலைதளங்களில் வெறுப்புப் பதிவு மற்றும் பொய் செய்திகள் நீக்கப்படாவிட்டால், அந்த நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்படும் என்ற ஜெர்மனி நாட்டின் புதிய சட்ட மசோதாவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது வெறுப்புப் பதிவுகளை எதிர்கொள்ள சரியான முறையல்ல என கருத்து தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் அமலாக்க சட்டம் (The Network Enforcement Act) என்ற இந்த சட்ட மசோதா பயனர்களைத் தாண்டி, அந்தந்த சமூக வலைதளங்களை நேரடியாகத் தண்டிக்க வகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவுக்கு ஜெர்மனி அமைச்சரவை ஏப்ரல் 5 அன்றே ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த மசோதா சட்டமாக வேண்டுமென்றால் ஜெர்மன் பாராளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இதற்கு முன், 2015-ஆம் ஆண்டு, பேஸ்புக், ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஜெர்மன் அரசுக்கு ஒரு உறுதியளித்தன. அதன்படி, தங்கள் தளங்களிலிருந்து வெற்றுப்புப் பதிவுகளை, பதிவேற்றப்பட்ட ஒரு நாளுக்குள் நீக்கிவிடுவோம் என்று கூறியிருந்தன. ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. அதைத் தொடர்ந்தே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், "பேஸ்புக் தனது பொறுப்பு என்ன என்பதை புரிந்துள்ளது. வெறுப்புப் பேச்சுகளை எதிர்கொள்ள அரசியல் ரீதியான முயற்சிகளையும் வரவேற்கிறது. ஆனால் இதுபோன்ற அளவுக்கதிகமான அபராதம் போன்றவை கண்டிப்பாக சட்டபூர்வமானதல்ல. இவர்கள் நோக்கங்கள் நிறைவேற இந்த மசோதா சரியான வழி அல்ல" என்று குறிப்பிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
19 days ago
தொழில்நுட்பம்
21 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago