செல்ஃபீ தொப்ப செல்ஃபீ காமிரா!

செல்ஃபீ என்று சொல்லப்படும் சுயபடங்களின் மோகம் அல்லது ஆர்வம் தீவிரமாகி கொண்டேதான் போகிறது. செல்ஃபீ போன்கள், செல்ஃபீ பிரெஷ் என தொடரும் இந்த வரிசையில் சமீபத்திய வரவு செல்ஃபி தொப்பி.

கம்ப்யூட்டர் மற்றும் டேப்லெட் தயாரிப்பில் புகழ்பெற்ற ஏசர் நிறுவனத்தின் பிரிட்டன் பிரிவு இந்த செல்ஃபீ தொப்பியை அறிமுகம் செய்துள்ளது. புகழ்பெற்ற பேஷன் வடிவமைப்பாளர் ஒருவருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த அகண்ட தொப்பியில் இணைக்கப்பட்டுள்ள டேப்லெட்டை கொண்டு அழகான சுயபடத்தை எடுத்துக்கொள்ளலாமாம். லண்டன் பேஷன் வாரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது இந்த செல்ஃபீ தொப்பி.

செல்ஃபீ தாக்கத்தின் இன்னொரு அடையாளம், கேமரா நிறுவனமான நிக்கான், செல்ஃபீ வசதி கொண்ட கேமராவை அறிமுகம் செய்துள்ளது. அதன் புதிய கூல்பிக்ஸ் கேமரா (Coolpix S6900) சுயபடம் எடுப்பதற்கான டச்ஸ்கிரீன் வசதி கொண்ட எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. ஏற்கனவே, கேனானின் பவர்ஷாட் கேமராவில் இதேபோல செல்ஃபீ எடுக்கும் வசதி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE