இந்தியாவுக்காக ஒரு ஸ்மார்ட்போன்!

By சைபர் சிம்மன்

எதிர்பார்க்கப்பட்டது போலவே கூகிள் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. கார்பன் (ஸ்பார்கிள் வி), ஸ்பைஸ் (டிரிம் யூனோ), மைக்ரோமேக்ஸ் (கேன்வாஸ் ஏ1) ஆகிய இந்திய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து இவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்று போன்களுமே ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்பைஸ், கார்பன் ஆண்ட்ராய்டு ஒன் போன்களை பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற மின்வணிக தளங்கள் மூலமும், மைக்ரோமேக்ஸ் போனை அமேசான் இந்திய தளம் மூலமும் வாங்கலாம். ஸ்பைஸ் போனின் விலை ரூ.6,299. மைக்ரோமேக்ஸ் விலை ரூ. 6,499. கார்பன் போனின் விலை ரூ.6,399 .

மூன்று போன்களுமே அடிப்படையில் பொதுவான அம்சங்களை கொண்டிருக்கின்றன. இரட்டை சிம், மெமரி கார்டு வசதிகள் இந்தியாவுக்காக பிரத்யேகமாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்ட்ராய்டு ஒன் போனில் கவனிக்கத்தக்க விஷயம் என்வென்றால், இவை இந்திய சந்தையில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்படுவதுதான். இந்திய சந்தையில் இருந்துதான் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு இது அறிமுகமாக உள்ளது. ஆண்ட்ராய்டு ஒன் போனின் மற்ற சிறப்பம்சங்களாக 2 ஆண்டுகளுக்கு சாப்ட்வேர் அப்டேட் செய்யும் வசதி, ஆப்லைனில் யூடியூப் வீடியோ பார்க்கும் வசதிகளைக் குறிப்பிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

16 hours ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

17 days ago

தொழில்நுட்பம்

19 days ago

மேலும்