சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

By செய்திப்பிரிவு

கொரியாவைச் சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் 4ஜி-யில் செயல்படும் ஸ்மார்ட்போனை தனது பிரபலமான கேலக்ஜி பிரிவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் (அக்டோபர்) விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 39,990 ஆகும்.

எதிர்காலத்தில் 4ஜி-யில் செயல்படும் விலை குறைந்த செல்போன்களை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு துணைத் தலைவர் அசிம் வார்சி தெரிவித்தார். இந்தப் பிரிவில் மிகவும் மெல்லியதான 6.7 மி.மீ தடிமன் அளவில் இது அறிமுகமாகியுள்ளது.

இதன் எடை 115 கிராமாகும். இதில் 4.7 அங்குல ஹெச்டி சூப்பர் அமோலெட் திரை உள்ளது. அக்டோ கோர் பிராசஸர் மற்றும் 12 மெகா பிக்ஸல் கேமிராவுடன் இது வெளிவந்துள்ளது.

கைவிரல் ரேகை ஸ்கேனர், பிரைவேட் மோட், இதய செயல்பாடு கண்காணிப்புடன் இது வெளிவந்துள்ளது. பிற சாம்சங் தயாரிப்புகளுடன் இணைக்கக் கூடியதாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் சாம்சங் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் 5 ஜிபி 4ஜி டேட்டா இணைப்பை இரண்டு மாதங்களுக்குப் பெறலாம். ஏர்டெல் நிறுவனம் எந்தெந்த தொலைத் தொடர்பு வட்டாரங்களில் 4ஜி சேவை அறிமுகப்படுத்தியுள்ளதோ அந்த பகுதிகளில் இந்த வசதி கிடைக்கும்.

செல்போன் தயாரிப்பில் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை வாடிக் கையாளர்களுக்கு தொடர்ந்து அளிப்பதில் சாம்சங் நிறுவனம் முன்னோடியாக உள்ளது என்று அறிமுக விழாவில் நிறுவனத்தின் தலைவர் இயக்குநர் எஸ்.கே. கிம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE