செயலி புதிது: நேரத்தை நிர்வகிக்க உதவும் செயலி

By சைபர் சிம்மன்

ஸ்மார்ட்போன் நேரத்தை வீணடிப்பதாக புகார் உண்டு, ஆனால் அதே ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்க வழி காட்டுவதாகச் சொல்கிறது ‘சேவ்மைடைம்’ செயலி.

ஸ்மார்ட்போன் பயனாளிகள் அடிக்கடி போனை எடுத்து பார்க்கும் பழக்கத்தையே இந்தச் செயலி சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், சராசரியாக 8 நிமிடங்களுக்கு ஒரு முறை போனை எடுத்து பார்ப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு நாளில் 120 முறை என வைத்துக்கொள்ளலாம்.

இப்படி ஒவ்வொரு முறை போனை எடுத்து அன்லாக் செய்ய முற்படும் போதெல்லாம், சேவ்மைடைம் செயலி, நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் எனும் கேள்வியைக் கேட்கிறது. இதற்கு அளிக்கும் பதில்களை வைத்து, நீங்கள் நேரத்தை எப்படி செலவிட்டீர்கள் என்பதை உணர்த்துகிறது.

நேரத்தை வீணடித்தீர்களா, சிறப்பாகப் பயன்படுத்தினீர்களா என்பதை விரிவாக அறிக்கையாக அளிக்கிறது இந்தச் செயலி. இதை அடிப்படையாகக் கொண்டு, பயனாளிகள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றம் செய்துகொள்ளலாம். ஒவ்வொரு செயலுக்கும் பயனாளிகள் தாங்கள் விரும்பும் அளவை நிர்ணயித்துக்கொள்ளலாம். தேவையில்லாத நேரங்களில் இந்தக் கண்காணிப்பை முடக்கியும் வைக்கலாம்.

விவரங்களுக்கு: http://savemytime.co/en/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

6 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

தொழில்நுட்பம்

20 days ago

மேலும்