வால்வோ எக்ஸ்.சி.90 புதிய மாடல் கார் அறிமுகம்

By செய்திப்பிரிவு

வால்வோ நிறுவனம், எக்ஸ்.சி.90 என்ற புதிய மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,02,89,900.

இதுகுறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், “இந்திய சந்தையில் அனைவராலும் விரும்பப்படும் மாடலாக இப்புதிய எக்ஸ்.சி.90 கார் இருக்கும். இது, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நவீன வடிமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மாடலில் உள்ள விசாலமான இருக்கை வசதி மற்றும் அதன் பாதுகாப்பு அம்சங்கள் வால்வோ நிறுவனத்தின் இந்திய சந்தைப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த உதவும்" என்றார்.

வால்வோ நிறுவனத்தின் இந்த புதிய காரை அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஜான்தெஸ்லெப் கூறும்போது, “ வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஸ்வீடனின் அர்ப்பணிப்பு இந்த புதிய வால்வோ எக்ஸ்.சி.90 மாடலில் வெளிப்படுகிறது. சமரசம் செய்யாத பாதுகாப்பு தர நிலைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் தடையற்ற செயல்பாடுகளுக்கு உறுதியளிக்கிறது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

18 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

22 days ago

தொழில்நுட்பம்

25 days ago

தொழில்நுட்பம்

26 days ago

தொழில்நுட்பம்

29 days ago

தொழில்நுட்பம்

29 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்