சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது டீப்சீக் (DeepSeek).
டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆகின்றன. ஆனால் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், ஏஐ-க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை பெரும் புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
டீப்சீக்கின் எழுச்சி அமெரிக்க ‘டெக்’ ஜாம்பவான்களை வியக்க வைத்தது ஒருபுறமென்றால், சீனாவுக்கு வெளியே சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ செய்யாத ஒரு பொறியியல் பட்டதாரி இத்தகைய சாதனையை எவ்வாறு செய்தார் என்பதுதான் அவர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.
தொடக்க பள்ளி ஆசிரியரின் மகனான லியாங் வென்ஃபெங், சீனாவின் குவாங்டாங் நகரின் வளர்ந்தவர். தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை சீனாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் பெற்றார். தன்னுடைய வகுப்பு தோழர்களுடன் இணைந்து லியாங் 2008-ம் ஆண்டு உள்நாட்டு பங்குகளை வர்த்தகம் செய்யத் தொடங்கினார். வெளிநாட்டு அனுபவங்கள் இல்லாத அவர்கள், பல்வேறு உத்திகளைப் பரிசோதித்த பிறகு, 2015-ல் ஹை-ஃப்ளையர் தளத்தை தொடங்கினர்.
2016-ம் ஆண்டு அதனுடன் இயந்திர கற்றலை (மெஷின் லேர்னிங்) இணைத்தனர். இது புதிய காரணிகளைக் கண்டறிய அவர்களுக்கு உதவியது. 2018-ம் ஆண்டு வாக்கில், இயந்திர கற்றல் அவர்களின் தயாரிப்புகளில் முழுமையாக இணைக்கப்பட்டது. 2023-ல், ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு செயற்கை பொது நுண்ணறிவு ஆய்வகத்தை ஹை-ஃப்ளையர் தொடங்கியது. அதே ஆண்டில் ஹை-ஃப்ளையரை பிரதான முதலீட்டாளர்களில் ஒருவராகக் கொண்டு, அந்த ஆய்வகம் டீப்சீக் ஆக மாறியது.
டீப்சீக்கின் வளர்ச்சி: ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக். பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஏஐ முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக். கடந்த 2023-ல் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. டீப்சீக் கோடர், எல்எல்எம், டீப்சீக்-வி2, டீப்சீக்-வி3 மற்றும் டீப்சீக்-ஆர்1 லைட் பதிப்புகள் வெளியாகி உள்ளன.
இதில் டீப்சீக்-வி3 தற்போது பரவலான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. அதன் எதிர் விளைவுதான் அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடம் பிடிக்க காரணம். இது அமெரிக்க டெக் வல்லுநர்களின் பாராட்டினை பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தான் டீப்சீக்-வி3 பொது பயன்பாட்டுக்கு வெளியானது. கடந்த 8-ம் தேதி இந்தியாவிலும், 10-ம் தேதி அமெரிக்காவிலும் இது அறிமுகமானது. வலைதளம் மற்றும் செயலி வடிவில் இதனை பயனர்கள் பயன்படுத்தலாம். தமிழ் மொழியிலும் இதை பயன்படுத்த முடியும்.
கதை, கட்டுரை, கவிதை, கணக்கு உள்ளிட்டவற்றை விரைந்து நொடி பொழுதில் தருகிறது டீப்சீக் ஏஐ. இப்போதைக்கு இதில் டெக்ஸ்ட் வடிவில் மட்டுமே பயனர்கள் உரையாட முடிகிறது. டீப்சீக்-வி3 வெர்ஷனை வெறும் 5.58 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 14.8 டிரில்லியன் டோக்கன்களின் டேட்டா செட்களை வெறும் 55 நாட்களில் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
23 hours ago
தொழில்நுட்பம்
20 hours ago
தொழில்நுட்பம்
22 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago