கூகுள் தேடலில் இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை

By செய்திப்பிரிவு

கூகுளில் தேடலில், இனி பாதுகாப்பான வலைதளங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வலைப்பதிவில், பாதுகாப்பான அம்சங்கள் கொண்டுள்ள இணையதளங்களுக்கே (http-க்கு பதிலாக https பயன்படுத்துதல்) முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில்,” இந்த அம்சமானது இணையத் தேடலில் 1% மீதே தாக்கம் செலுத்தும். மற்ற அம்சங்களுக்கும் கூகுள் தேடலில் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்படும்.

நாங்கள் இணையதள உரிமையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான இணையதள முறைக்கு மாறவேண்டும் என்றும், இணையம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றும் கருதுவதால், இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்நிறுவனம் ஏற்கனவே ‘Gmail’ வலைதளத்தைப் பாதுகாப்பான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு, கூகுள் தேடல் ‘https’ பயன்படுத்தி, பாதுகாப்பாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

10 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

15 days ago

மேலும்