ஐபிஎல், மகாராஜா, ரத்தன் டாடா... - கூகுள் தேடல் 2024 டாப் 10 பட்டியல்கள் | Year Ender 2024

By செய்திப்பிரிவு

சென்னை: இன்றைய இணைய உலகில் மில்லியன் கணக்கான டிஜிட்டல் சாதன பயனர்கள் தங்களுக்கு வேண்டியதை கூகுள் தளத்தில் நினைத்த நேரத்தில் தேடி (Search) தெரிந்து கொள்கின்றனர். உலக அளவில் நாளொன்றுக்கு இந்தத் தேடலின் எண்ணிக்கை பில்லியனை கடப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், 2024-ம் ஆண்டில் இந்தியாவில் பயனர்கள் அதிகம் தேடிய விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல், ஒலிம்பிக், டி20 உலகக் கோப்பை என விளையாட்டு களமும், ஸ்திரீ 2 முதல் மகாராஜா வரை என திரைப்படங்கள் குறித்தும், எப்படி வாக்களிப்பது, காற்றின் தரம் போன்றவையும், மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்தும், வினேஷ் போகத், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் குறித்தும் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டுள்ளது.

2024-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பட்டியல்:

  1. ஐபிஎல்
  2. டி20 உலகக் கோப்பை
  3. பாரதிய ஜனதா கட்சி
  4. தேர்தல் முடிவுகள் 2024
  5. ஒலிம்பிக்
  6. அதீத வெப்பம்
  7. ரத்தன் டாடா
  8. காங்கிரஸ் கட்சி
  9. புரோ கபடி லீக்
  10. இந்தியன் சூப்பர் லீக்

டாப் 10 திரைப்படங்கள்: ஸ்த்ரீ 2, கல்கி 2898 ஏடி, 12த் ஃபெயில், லாபதா லேடீஸ், ஹனு-மான், மகாராஜா, மஞ்சும்மல் பாய்ஸ், தி கோட், சலார், ஆவேஷம்.

டாப் ட்ரெண்டிங் ஷோஸ்: ஹீராமண்டி, மிர்சாபூர், லாஸ்ட் ஆப் அஸ், பிக் பாஸ் 17, பஞ்சாயத், குயின் ஆப் டியர்ஸ், மேரி மை ஹஸ்பண்ட், கோட்டா பேக்டரி, பிக் பாஸ் 18, 3 பாடி ப்ராப்ளம். இதே போல இல்லுமினாட்டி, கட்சி சேர, ஆச கூட ஆகிய பாடல்களும் டாப் 10 தேடலில் இடம்பிடித்துள்ளது. All Eyes on Rafah, விராட் கோலியின் மகன் Akaay போன்றவற்றின் அர்த்தத்தை அறியும் நோக்கில் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது.

டாப் 10 பிரபலங்கள்: ஓய்வு பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூகுளில் தேடப்பட்ட டாப் 10 பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நிதிஷ் குமார் (பிஹார் முதல்வர்), சிராக் பாஸ்வான் (மத்திய அமைச்சர்), ஹர்திக் பாண்டியா (கிரிக்கெட் வீரர்), பவன் கல்யாண் (ஆந்திர துணை முதல்வர்), ஷஷாங் சிங் (கிரிக்கெட் வீரர்), பூனம் பாண்டே (நடிகை), ராதிகா மெர்ச்சன்ட் (முகேஷ் அம்பானி மருமகள்), அபிஷேக் சர்மா (கிரிக்கெட் வீரர்), லக்‌ஷயா சென் (பாட்மிண்டன் வீரர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்: ஐபிஎல், டி20 உலகக் கோப்பை, ஒலிம்பிக், புரோ கபடி லீக், இந்தியன் சூப்பர் லீக், வுமன்ஸ் ப்ரீமியர் லீக், கோபா அமெரிக்கா (கால்பந்து தொடர்), துலீப் டிராபி, யூரோ கோப்பை (கால்பந்து தொடர்), யு19 உலகக் கோப்பை.

போட்டிகளை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டாப் 10 போட்டிகளுக்கான தேடலில் இடம்பெற்றுள்ளது. மாங்காய் ஊறுகாய், கஞ்சி போன்ற ரெசிப்பிக்கள் குறித்தும், அஜர்பைஜான், பாலி, மணாலி, கஜகஸ்தான், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பயணம் சார்ந்த இடங்கள் குறித்தும் கூகுளில் தேடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

12 days ago

தொழில்நுட்பம்

13 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

15 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

16 days ago

மேலும்