சென்னை: பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பில் அதன் ஃபைபர் இணைய இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை இலவசமாக பார்க்கும் வசதியை தமிழகம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிஎஸ்என்எல் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டிருக்கும் அரசு வளர்ச்சி காரணமாக உலகமே உள்ளங்கையில் அடங்கிவிட்டது. இதனால் தொலைக்காட்சி சேவை, டிடிஎச், ஓடிடி செயலி, ஃபைபர் இணையம் மூலம் செட்டாப் பாக்ஸ் வழியே தொலைக்காட்சி சேவை என வளர்ச்சி பெற்றது.
அடுத்தகட்டமாக இப்போது ஃபைபர் இணைப்பு மூலம், டேட்டா செலவு இல்லாமல் தொலைக்காட்சிகளை பார்க்கும் வசதி புதிதாக வந்துள்ளது. இந்த சேவையை இந்தியாவில் முதன்முறையாக பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் ஃபைபர் இணைய இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் இலவசமாக 500-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை பார்க்க முடியும்.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டம் சோதனை அடிப்படையில் தமிழகம் மற்றும் மத்திய பிரதேசத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. செட்டாப் பாக்ஸ், போன் பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், செட்டாப்பாக்ஸ் போன் கருவி வழங்கப்படும். அதை தொலைக்காட்சியில் இணைத்து, பிஎஸ்என்எல்-ன் செயலியை பதிவிறக்கம் செய்து, தொலைக்காட்சியில் நிறுவ வேண்டும்.
அதன் பிறகு, அதில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி தொலைக்காட்சிகளை இலவசமாக பார்க்க முடியும். முதற்கட்டமாக கட்டண சேனல்களையும் இலவசமாக பார்க்க முடியும். இவ்வாறு பார்க்கும்போது, வாடிக்கையாளர்கள் பெற்றுள்ள டேட்டாவின் அளவு குறையாது. இதற்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த சேவையை பெற தொலைக்காட்சியில் ஆண்டிராய்டு பதிப்பு.10 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். இந்த சேவை ஸ்மார்ட் கைபேசியில் கிடைக்காது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தமிழ் சேனல்கள்: இந்த சேவை தொடர்பாக, பிஎஸ்என்எல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தமிழில் உள்ள பிரபல கட்டண தொலைக்காட்சிகளின் லட்சினைகளும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தையும் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு பிஎஸ்என்எல் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago
தொழில்நுட்பம்
20 days ago