நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், அவரது நண்பர் எலான் மஸ்குக்கு சொந்தமான ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் இருந்து பயனர்கள் விலகுவது அதிகரித்துள்ளது. அவர்கள் ப்ளூஸ்கை மற்றும் த்ரெட்ஸ் போன்ற தளங்களில் இணைந்துள்ளதாக தகவல்.
இதனை சமூக வலைதள நிறுவனங்களான ப்ளூஸ்கை மற்றும் த்ரெட்ஸ் உறுதி செய்துள்ளன. கடந்த ஒரு வார காலத்தில் ப்ளூஸ்கை தளத்தில் மட்டும் சுமார் 10 பயனர்கள் புதிதாக இணைந்துள்ளனர். அதே போல நவம்பர் மாத முற்பாதியில் மட்டும் சுமார் 275 மில்லியன் ஆக்டிவ் பயனர்களை த்ரெட்ஸ் கொண்டுள்ளது.
எக்ஸ் தளத்தில் இருந்து பயனர்கள் வெளியேற காரணம் என்ன? - அதிபராக தேர்வாகி உள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர ஆதரவாளர் எலான் மஸ்க். இந்த நிலையில் தான் தவறான தகவல் மற்றும் வெறுப்பு பேச்சு போன்ற காரணங்களை சுட்டிக்காட்டி பயனர்கள் எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறி வருகின்றனர். பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ கூட எக்ஸ் தளத்தில் இனி எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. பயனர்கள் சொல்லியுள்ள காரணம் எக்ஸ் தளத்தின் மதிப்பை தரம்தாழ்த்தி உள்ளது.
இருப்பினும் இன்னும் உலக அளவில் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், பிரபலங்களின் அறிவிப்புகளை அறிய இன்னும் எக்ஸ் தளம் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
» சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே 4 சிறப்பு ரயில்கள்: விரைவில் அறிவிப்பு
» சென்னை சம்பவத்துக்கு கண்டனம் | தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்: நோயாளிகள் பாதிப்பு
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த 2022-ல் வாங்கி இருந்தார். அது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்துக்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்கள் பணி நீக்கம் தொடங்கி அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டண வசூல் வரையில் அதை சொல்லலாம். ட்விட்டரின் பெயரையும் எக்ஸ் என அவர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
23 days ago
தொழில்நுட்பம்
27 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago