ஐபோன் 16 புரோ போனில் டச் ஸ்க்ரீன் பிரச்சினை: பயனர்கள் புகார்

By செய்திப்பிரிவு

சென்னை: ஐபோன் 16 புரோ மற்றும் புரோ மேக்ஸ் போன்களில் டச் ஸ்க்ரீன் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஆப்பிள் சாதனங்கள் குறித்து செய்திகளை வெளியிட்டு வரும் 9டு5 மேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சர்வதேச சந்தையில் ஐபோன் 16 சீரிஸ் மாடல் போன்கள் விற்பனைக்கு வந்தது. இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஐபோன் 16 போன்கள் விற்பனை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

16 புரோ டச் ஸ்க்ரீன் பிரச்சினை: இதில் 16 புரோ மாடல் போன்களில் டச் ஸ்க்ரீன் முறையாக ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என பெரும்பாலான பயனர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். இதுதான் இப்போது கவனம் பெற்றுள்ளது. இதனால் தங்கள் போனை பயன்படுத்துவதில் சிக்கல் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். தொடுதிரையை தொட்டால் அதற்கான ரெஸ்பான்ஸ் மிகவும் தாமதமாக அல்லது ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஹார்டுவேர் சார்ந்த சிக்கலாக இருக்க வாய்ப்பில்லை என டெக் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்த்தில் கேமரா கன்ட்ரோல் பட்டன் அருகே டச் செய்யும் போதுதான் இந்த சிக்கலை எதிர்கொள்வதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆப் ஸ்க்ராலிங் மட்டும் ஹோம் ஸ்க்ரீன் பேஜ்களை ஸ்வைப் செய்யும் போதும் தான் இந்த சிக்கலை எதிர்கொள்வதாகவும் பயனர்கள் தெரிவித்துள்ளனர். சாப்ட்வேர் சார்ந்த அப்டேட்கள் மூலம் இதற்கு தீர்வு காணலாம் என வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

ஐபோன் 16 புரோ, ஐபோன் 16 புரோ மேக்ஸ் சிறப்பு அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE