தேசிய விண்வெளி நாள்: இந்தியாவின் தேசிய விண்வெளி நாள் ஆகஸ்ட் 23 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சந்திரயான் - 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை நினைவுகூரும் விதத்தில் இந்த நாள் உருவானது. 2023, ஆகஸ்ட் 23 அன்று சந்திரயான் - 3 தரையிறங்கு கலம், உலாவிக் கருவிகளை வெற்றிகரமாகத் தரையில் இறக்கியது.
இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகவும் இந்தியா சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் விண்வெளித் திட்டங்களில் முக்கிய மைல்கல்லை இஸ்ரோ எட்டியது. 23 ஆகஸ்ட் 2024, முதலாம் தேசிய விண்வெளி நாள். இந்திய விண்வெளிப் பயணங்களின் சாதனைகளை வெளிப்படுத்தவும் இளைஞர்களிடம் விண்வெளித் துறை குறித்த ஆர்வத்தைத் தூண்டவும் இந்திய அரசு ஒரு மாதக் காலத்துக்குப் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது.
» சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
» அனில் அம்பானி, 24 நிறுவனங்களுக்கு ‘செபி’ தடை - பின்னணி என்ன?
குலசேகரப்பட்டினம்: ஆந்திரத்தின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்துதான் உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள், வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை இந்தியா செலுத்திக்கொண்டிருந்தது. தற்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவின்போது ரோகிணி 6 H 200 என்கிற சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது. குலசேகரப்பட்டின ஏவுதளம் இரண்டு ஆண்டுகளில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏவு வாகனங்கள் > பி.எஸ்.எல்.வி.: Polar Satellite Launch Vehicle என்பது இந்தியாவின் செயல்பாட்டில் உள்ள இரண்டு ஏவு வாகனங்களில் ஒன்று. உள்நாட்டி லேயே உருவாக்கப்பட்ட ஏவுகலம் இது. விண்வெளிக்கு விண்கலன்களை எடுத்துச்செல்லப் பயன்படுகிறது. இது பல்வேறு சுற்றுப்பாதைகளை அடையக் கூடிய நடுத்தர எடையைச் சுமந்து செல்லக் கூடியது.
ஏ.எஸ்.எல்.வி.: Augmented or Advanced Satellite Launch Vehicle என்பது 1980களில் செயற்கைக்கோள் களைப் புவிசார் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தத் தேவையான தொழில் நுட்பங்களை உருவாக்க வெளியிடப்பட்ட மற்றொரு சிறிய ஏவு வாகனம்.
ஜி.எஸ்.எல்.வி.: Geosynchro nous Satellite Launch Vehicle என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் செயற்கைக்கோள்கள், பிற விண்வெளிப் பொருள்களை, புவி ஒத்திசைவு பரிமாற்றச் சுற்றுப்பாதையில் செலுத்துவதற் காக வடிவமைக்கப்பட்டு, உரு வாக்கப்பட்டு இயக்கப்படும் ஒரு விண்வெளி ஏவு வாகனம். பி.எஸ்.எல்.வியைவிட அதிக எடையுள்ள சுமையைச் சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் ஜி.எஸ்.எல்.விக்கு உண்டு.
எஸ்.எஸ்.எல்.வி.: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சிறிய செயற்கைக்கோள் ஏவு வாகனத்தை (Small Satellite Launch Vehicle) உருவாக்கி யுள்ளது. இதுவரை சிறிய செயற்கைக்கோள்களும் பெரிய செயற்கைக் கோள்களும் பி.எஸ்.எல்.வி. மூலம் ஏவப்பட்டு வந்தன.
இது சிறிய செயற்கைக்கோள்களை அனுப்பு வதற்குக் காத்திருக்கும் சூழலை உருவாக்கியது. எஸ்.எஸ்.எல்.வி. 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களைத் தாழ் புவி சுற்றுவட்டப் பாதைக்குத் தேவையின் அடிப்படையில் அனுப்பப் பயன்படுகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
19 days ago