சென்னை: பயனரின் போன் எண்ணுக்கு பதிலாக யூஸர் நேமை கொண்டு வரும் வாட்ஸ்அப் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பயனர்களின் பிரைவசி சார்ந்து இந்த அம்சம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த தகவலை WA பீட்டா இன்ஃபோ பகிர்ந்துள்ளது. மேலும், தெரியாத பயனர்களுக்கு மற்ற பயனர்கள் மெசேஜ் அனுப்பி வேண்டுமென்றால் யூஸர் நேம் மற்றும் அந்த பயனரின் பாஸ்வேர்டு வேண்டும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர்களின் போன் எண்ணுக்கு பதிலாக யூஸர் நேமை இடம்பெற செய்யும் அம்சம் குறித்து தற்போது தகவல் கசிந்துள்ளது.
» பூந்தமல்லி நீதிமன்றத்தில் போலீஸ்காரர் மீது தாக்குதல்: வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு
» ‘சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்புவார்’ - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை
இந்த ஆண்டு இறுதியில் இந்த அம்சம் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக WA பீட்டா இன்ஃபோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரேண்டமாக ஒரு பயனருக்கு மற்றவர்கள் மெசேஜ் அனுப்புவது தடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த அம்சம் பயனர்களின் ஆப்ஷன் அடிப்படையில் இயங்கும் என தெரிகிறது. அதாவது மொபைல் எண் அல்லது யூஸர் நேம் அடிப்படையில் பயனர்கள் தங்களது கணக்கை பயன்படுத்த முடியும் என தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
11 hours ago
தொழில்நுட்பம்
15 hours ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
11 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
18 days ago