சாம்சங் கேலக்சி Z Fold 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: சாம்சங் நிறுவனம் கேலக்சி ‘Z Fold 6’ போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதனுடன் Z Flip 6 போனும் வெளிவந்துள்ளது.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப் புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிறுவனத்தின் கேலக்சி சீரிஸ் போன்கள் உலக அளவில் பிரபலம். அந்த வகையில் தற்போது கேலக்சி Z ஃபோல்ட் 6 போன் வெளிவந்துள்ளது. பயனர்களுக்கு சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏஐ அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE