சென்னை: இந்தியாவில் மெட்டா நிறுவனத்தின் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டான ‘மெட்டா ஏஐ’ அறிமுகம் ஆகியுள்ளது. இதனை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் பயனர்கள் விரைவில் பயன்படுத்தலாம். பயனர்களின் பயன்பாட்டுக்கு படிப்படியாக இது கிடைக்கப்பெறும் என தெரிகிறது.
இப்போதைக்கு இதனை இந்தியாவில் ஆங்கில மொழியில் மட்டுமே பயன்படுத்த முடியும். மெட்டா நிறுவன சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது மெட்டா ஏஐ வலைதளத்திலும் இதனை பயன்படுத்தலாம். இதனை அதன் சேர்ச் பாக்ஸில் பயனர்கள் பயன்படுத்தலாம்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த சாட்பாட்டினை சர்வதேச அளவில் மெட்டா அறிமுகம் செய்தது. இருந்தும் இந்த பாட் பயன்பாட்டை இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்ற காரணத்தால் தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம், அதன் Gemini சாட்பாட்டை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதையடுத்து மெட்டாவும் தனது ஏஐ சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
மற்ற ஜெனரேஷன் ஏஐ சாட்பாட்களை போலவே இதிலும் பயனர்கள் பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ளலாம். பயனர்கள் இதைக் கொண்டு மின்னஞ்சல் எழுத, கவிதை, மொழிபெயர்ப்பு, டெக்ஸ்டுகளை சுருக்கி தர, இமேஜ் மற்றும் GIF உருவாக்க என பல பணிகளை செய்யலாம். இது அனைத்தையும் பயனர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தபடி மேற்கொள்ளலாம். கூகுள், மைக்ரோசாஃப்ட் வழங்கும் நிகழ்நேர சேர்ச் ரிசல்ட்களை பயனர்கள் இதில் பெற முடியும்.
» சேதி தெரியுமா? | கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து முதல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் வரை
» கள்ளக்குறிச்சி துயரம் | சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு
இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த ஏஐ பாட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான பயனர்கள் தங்களது ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் மெட்டா ஏஐ தள பக்கத்திலும் இதனை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர். Meta AI is not yet available in your country என பலருக்கும் அதன் தளத்தில் காண்பித்து வருகிறது. பயனர்களுக்கு வரும் நாட்களில் படிப்படியாக இந்த ஏஐ பாட் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
21 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
6 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
24 days ago
தொழில்நுட்பம்
27 days ago
தொழில்நுட்பம்
28 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago