பிரிட்டனில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ‘ஏஐ ஸ்டீவ்’ எனும் ஏஐ அவதார், எம்.பி பொறுப்புக்கு போட்டியிடுகிறது. இது குறித்த பேச்சு தற்போது கவனம் ஈர்த்து வருகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
அந்த நாட்டின் தொழிலதிபர் ஸ்டீவ் எண்டாகோட் (Steve Endacott) தான் இதன் பின்னணியில் உள்ளார். தேர்தலில் ஏஐ ஸ்டீவ் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்துக்கு 59 வயதான ஸ்டீவ் எண்டாகோட் செல்வார். அவர் சார்பாக மக்களுடன் உரையாடி வருகிறது இந்த ஏஐ ஸ்டீவ். தேர்தல் என்றாலே பிரச்சாரம் என்பது அதன் அடிப்படைகளில் ஒன்று. அந்த வகையில் வாக்காளர்களுடன் 24x7 உரையாடும் வகையில் இதனை அறிமுகம் செய்துள்ளார் ஸ்டீவ் எண்டாகோட்.
பிரிட்டனில் உள்ள பிரைட்டன் பெவிலியன் தொகுதியில் சுயேச்சையாக ஏஐ ஸ்டீவ் களம் கண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ‘இது வெறும் ஆரம்பம் தான்’, விரைவில் நாங்கள் அரசியல் கட்சி தொடங்க உள்ளோம். அப்போது இதேபோல மேலும் பல ஏஐ அவதார்கள் களமிறக்கப்படுவார்கள். இது ஜனநாயகத்துக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நகர்வு என ஸ்டீவ் எண்டாகோட் தெரிவித்துள்ளார்.
யதார்த்த அரசியலில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அவர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தகவல். அவர் ‘ஸ்மார்ட்டர் யூகே’ எனும் கட்சியை தொடங்கியுள்ளார். இருந்தும் அதனை இன்னும் முறைப்படி பதிவு செய்யவில்லை எனத் தெரிகிறது.
» “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் முதல்வர் ஸ்டாலின் ஓடி ஒளிந்துள்ளார்” - எச்.ராஜா சாடல்
» கள்ளச் சாராய வழக்கில் இதுவரை 11 பேர் கைது: கள்ளக்குறிச்சி நிலவரம் என்ன?
ஒரே நேரத்தில் பத்தாயிரம் பேருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் வல்லமை கொண்டுள்ளது ஏஐ ஸ்டீவ். தன்பாலின ஆர்வலர்களின் உரிமை, குப்பை சேகரிப்பு, இஸ்ரேல் - ஹமாஸ் மோதல், குடியேற்றம் என மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வாக்காளர்களுடன் நிகழ் நேரத்தில் இது பேசி வருகிறது. அதற்கான தீர்வு மற்றும் எடுக்க வேண்டிய முடிவுகளையும் கேட்டு அறிகிறது. இதன்மூலம் மக்களுடன் எந்நேரத்திலும் தொடர்பில் இருக்க முடியும் என ஸ்டீவ் எண்டாகோட் நம்புகிறார்.
ஸ்டீவ் எண்டாகோட் தலைவராக உள்ள நியூரல் வாய்ஸ் என்ற நிறுவனம் தான் ஏஐ ஸ்டீவை வடிவமைத்துள்ளது. பல்வேறு நிறுவனங்களுக்கு ஏஐ வாய்ஸ் அசிசஸ்டன்ட்களை வடிவமைத்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் மக்கள், ஸ்டீவ் உடன் சாட் செய்யலாம். அது குரல்வழி மற்றும் டெக்ஸ்ட் என உள்ளது. ஏஐ ஸ்டீவ் உடன் சாட் செய்ய!
‘ஹாய். நான் ஏஐ ஸ்டீவ். பிரைட்டன் எம்.பி தொகுதியில் போட்டியிடுகிறேன். நான் எந்த வகையான மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை என்னிடம் சொல்லலாம்’ என அதன் சாட் பாக்ஸில் சொல்கிறது. அதோடு அதன் பிரத்யேக வலைதள பக்கத்தில் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த முயற்சி வேடிக்கையானது அல்ல. இது எனது தொழிலை விளம்பரம் செய்ய வேண்டும் என மேற்கொள்ளவில்லை. மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்நேரமும் அவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். நாடாளுமன்றத்தில் நான் முன்னெடுக்கின்ற முடிவுகள் ஒவ்வொன்றும் வாக்காளர்களின் முடிவு என நான் பெருமையாக சொல்வேன். இந்த ஏஐ அவதார் மூலம் அவர்களுடன் மின்னணு முறையில் என்னால் தொடர்பில் இருக்க முடியும்” என ஸ்டீவ் எண்டாகோட் சொல்கிறார்.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் வயோமிங் மேயர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் தனக்காக ஏஐ அவதார் ஒன்றை பயன்படுத்தி இருந்தார். அந்த வகையில் இது போன்ற முயற்சிகள் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.
> முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 17 - ‘டீப்ஃபேக் வீடியோ, வாய்ஸ் குளோனிங்’ - இது தேர்தல் கால அச்சுறுத்தல்
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
19 days ago