சென்னை: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ‘லிமிட் இன்டரேக்ஷன்ஸ்’ ( Limit Interactions ) என்ற புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது இன்ஸ்டா பயனர்களுக்கு எந்த வகையில் பயன் தரும் என்பதை பார்ப்போம்.
மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளம்தான் இன்ஸ்டாகிராம். கடந்த 2010-இல் தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் மெட்டா (அப்போது பேஸ்புக்) அதனை கையகப்படுத்தியது. இன்று உலக அளவில் மாதந்தோறும் சுமார் 1 பில்லியனுக்கும் மேலான ஆக்டிவ் பயனர்கள் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருவதாக தகவல்.
ஸ்டோரி முதல் போஸ்ட் வரை அனைத்தையும் இதில் பதிவு செய்யலாம். அனைத்தும் காட்சி வடிவிலான மொழியில் இருக்கும். இன்றைய இளைஞர்கள் அதிகம் உலா வருவது இன்ஸ்டாவில் தான். அதை கருத்தில் கொண்டு பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்திற்காக அவ்வப்போது புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் லிமிட் இன்ட்ரேக்ஷன்ஸ் ( Limit Interactions ) என்ற அம்சத்தை மெட்டா வெளியிட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் ட்ரோல் மற்றும் Bulliying போன்றவற்றை பயனர்கள் எதிர்கொள்வதை தடுக்கும் வகையில் இந்த அம்சம் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட பயனர்களிடத்தில் இருந்து வரும் டிஎம் (டைரக்ட் மெசேஜ்), போஸ்டுக்கான கமெண்டுகள், டேக்ஸ் போன்ற அனுமதிகள் இருக்காது. இதை தற்காலிகமாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அதாவது ஒருநாள் முதல் நான்கு வார காலம் வரையில்.
இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது நெருங்கிய நட்புகளுடன் மட்டும் இன்டரேக்ட் செய்யலாம். மற்ற பயனர்களிடத்தில் இருந்து மெசேஜ், கமெண்ட், டேக் போன்றவற்றை பெறாமல் இருக்கலாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தின் செட்டிங்ஸ் அண்ட் ஆக்டிவிட்டிக்கு சென்று லிமிட் இன்டரேக்ஷன்ஸ் தேர்வு செய்தால் இந்த அம்சத்தின் பயன்பாட்டை பெற முடியும்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
14 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
19 days ago