வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்சரை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது! - விரைவில் புதிய அம்சம்

By செய்திப்பிரிவு

கலிபோர்னியா: பயனர்களின் ப்ரொஃபைல் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையிலான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி உள்ள நிலையில், அது குறித்து பார்ப்போம்.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் ப்ரொஃபைல் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுப்பதை தடுக்கும் அம்சம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதனை வாட்ஸ்அப் சார்ந்த நம்பகத் தகவல்களை வெளியிட்டு வரும் WAபீட்டா இன்போ தெரிவித்துள்ளது. பயனர் பிரைவசி சார்ந்து இது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ப்ரொஃபைல் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயன்றால் அப்போது ஒரு நோட்டிபிகேஷன் வரும்.

பயனர்களின் பிரைவசி சார்ந்து இது தடுக்கப்படுகிறது எந்த அதில் தெரிவிக்கப்படும். இந்த அம்சம் முதலில் ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும். தற்போது சில ஐபோன் பயனர்கள், தங்களது போனில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இதனை பெற முடிகிறது. அதன் பிறகு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

10 hours ago

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

3 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

14 days ago

தொழில்நுட்பம்

16 days ago

தொழில்நுட்பம்

24 days ago

தொழில்நுட்பம்

28 days ago

தொழில்நுட்பம்

29 days ago

தொழில்நுட்பம்

30 days ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

தொழில்நுட்பம்

1 month ago

மேலும்