சான் பிரான்சிஸ்கோ: Wordpress மற்றும் Tumblr போன்ற தளங்களின் தாய் நிறுவனமான ‘ஆட்டோமேட்டிக்’ நிறுவனம், தங்களது பயனர் விவரங்களை ஓபன் ஏஐ, மிட்ஜெர்னி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த ஏஐ நிறுவனங்கள் பயிற்சி ரீதியான பணிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது.
கடந்த 2022-ல் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த டாக் உலக மக்கள் மத்தியில் பரவலானது. ஏஐ டூல்களின் இயக்கத்துக்கு பெரிய அளவிலான டேட்டாக்கள் தேவை. இப்போது வரையில் இந்த டேட்டாக்கள் இணையவெளியில் இருந்து திரட்டப்பட்டு வருகிறது. அதனால் படைப்பாளிகள் மற்றும் பதிப்பகங்கள் தங்களது படைப்புகளை தங்களுக்கே தெரிவிக்காமல் ஏஐ நிறுவனங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் ஆட்டோமேட்டிக் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதே வழியில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது பயனர் விவரங்களை ஏஐ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தங்களது தரவுகளை ஏஐ நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு பகிர விரும்பாத பயனர்கள் அதை தவிர்ப்பதற்கான வழியும் இருப்பதாக ஆட்டோமேட்டிக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய அம்சம் ஒன்று கொண்டு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்மதிக்கும் ஏஐ நிறுவனங்களுடன் மட்டுமே பயணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» பிசிசிஐ ஒப்பந்தம் | ஜெய்ஸ்வால் உள்ளே... இஷான், ஸ்ரேயஸ் வெளியே!
» தமிழகம் முழுவதும் மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
இந்த தகவல் வெளியான நிலையில் சமூக வலைதளமான Tumblr-ல் இருந்து பயனர்கள் தங்களது புகைப்படங்களை நீக்கி வருவதாக சொல்லப்படுகிறது. பிரபலமான பிளாகிங் தளமாக Wordpress விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
5 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
13 days ago
தொழில்நுட்பம்
16 days ago
தொழில்நுட்பம்
18 days ago
தொழில்நுட்பம்
26 days ago
தொழில்நுட்பம்
30 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago