புதுடெல்லி: இணைய பாதுகாப்பு நிறுவனமான மெகாபீ, காதலர் தினத்தை முன்னிட்டு, ‘நவீன காதல்’ என்ற தலைப்பில் 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் கூறியிருப்பதாவது:
காதலர்களுடனான கருத்து பரிமாற்றத்துக்கு ஓபன் ஏஐ சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, மைக்ரோசாப்ட் கோபிலட் ஆகிய செயற்கைநுண்ணறிவு (ஏஐ) மென்பொருள்களை பயன்டுத்த திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 25% பேர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தங்களுடைய காதலர்களுக்கு கடிதம் எழுத ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக 56% இந்தியர்கள் தெரிவித்தனர்.
சாட் ஜிபிடி உதவியுடன் எழுதப்பட்ட காதல் கடிதங்களைப் பார்த்து காதலில் விழுந்ததாக 78% இந்தியர்கள் தெரிவித்தனர். தங்களுடைய டேட்டிங் செயலியின் புரபைலுக்காக, படங்கள் அல்லது வாசகங்களை உருவாக்க ஏஐ உதவியை நாடியதாக65% இந்தியர்கள் தெரிவித்தனர். அதேநேரம், இணைய வழியில்தங்களுடன் கலந்துரையாடியவர்கள் போலி நபர்கள் என தெரியவந்துள்ளதாக 26% பேர் தெரிவித்தனர். இதே கருத்தை 39% இந்தியர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
8 hours ago
தொழில்நுட்பம்
13 hours ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
7 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
9 days ago
தொழில்நுட்பம்
10 days ago
தொழில்நுட்பம்
14 days ago