Concept Device | கையில் வாட்ச் போல கட்டக்கூடிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன்

By செய்திப்பிரிவு

சென்னை: கையில் வாட்ச் போல கட்டிக் கொள்ளக் கூடிய Flexible ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இது கான்செப்ட் டிவைஸாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவாவின் வருடாந்திர குளோபல் டெக் வேர்ல்ட் நிகழ்வில் இந்த சாதனம் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். மற்ற மொபைல்போன் நிறுவனங்கள் அனைத்தும் ஃபோல்டபிள் போனை சந்தையில் அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த சூழலில் Flexible ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை மோட்டோ வெளியிடவில்லை. வெகு விரைவில் இந்த தகவல் வெளியாகும் என தெரிகிறது.

6.9 இன்ச் டய்க்னல் திரையை கொண்டுள்ளது இந்த போன். ஃபுள் ஹெச்டி+ ரெஸலூஷனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள காந்த சக்தியின் மூலம் கையில் வாட்ச் போல பயனர்கள் அணிய முடியும் என தெரிகிறது. மேலும், இந்த போனை டேபிளில் ஸ்டாண்ட் போலவும் வைக்கலாம்.

செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் இருக்கும் என கணித்திருக்கமாட்டார். அந்த அளவிற்கு மாற்றம் கண்டுள்ளது செல்போன். அந்த வகையில் இந்த Flexible ஸ்மார்ட்போன் மொபைல்போன் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE