27 கோடி போலியான கணக்குகள்: ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக்

By ஐஏஎன்எஸ்

ஃபேஸ்புக்கில் 27 கோடி போலி அல்லது ஒரே மாதிரியான கணக்குகள் இருப்பதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

முன்னதாக 1 கோடி வரை போலி கணக்குகள் இருக்கும் என்று ஃபேஸ்புக் நினைத்ததாகவும் ஆனால் உண்மையில் 27 கோடி போலி கணக்குகள் இருப்பதாகவும் டெலிகிராப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, ''2.1 பில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களில் 2 - 3 சதவீதத்தினர் விரும்பத்தகாத கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களில் 10 சதவீதம் பேர், உண்மையான பயனர்களின் நகல் கணக்குகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்த காலாண்டு முடிவுகளைக் காட்டிலும் (6%) கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும்.

மொத்தத்தில் 2.1 பில்லியன் மாதாந்திர ஃபேஸ்புக் பயனர்களில் 13 சதவீதம் பேர் (27 கோடி பேர்) முறைகேடான கணக்குகள் மூலம் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர்.

போலி கணக்குகளைக் கண்டறியும் வழிமுறைகளை ஃபேஸ்புக் நிறுவனம் ஆய்வு செய்துவருகிறது.

இதன்மூலம் சமூக வலைதளமான ஃபேஸ்புக், தன்னை மீளாய்வு செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 day ago

தொழில்நுட்பம்

2 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

4 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

5 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

7 days ago

தொழில்நுட்பம்

8 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

9 days ago

தொழில்நுட்பம்

11 days ago

தொழில்நுட்பம்

11 days ago

மேலும்